Published : 08 Oct 2014 10:28 AM
Last Updated : 08 Oct 2014 10:28 AM

மைக்கேல் கோர்பட் - இவரைத் தெரியுமா?

$ சிட்டி குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி. அக்டோபர் 2012 முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார். இவருக்கு முன்பு சிட்டி குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர் இந்தியாவின் விக்ரம் பண்டிட்

$ இவருடைய மொத்த கார்ப்பரேட் வாழ்க்கையும் சிட்டி மற்றும் அதனுடைய துணை நிறுவனங்களில் மட்டுமே இருக்கிறது.

$ ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளாதாரம் படித்தவர். 1983-ம் படிப்பு முடிந்தவுடன் சிட்டி குழுமத்தின் சால்மன் பிரதர்ஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் இணைந்தார்.

$ 2013-ல் இவரது ஆண்டு சம்பளம் 1.44 கோடி டாலர்கள்.

$ குழுமத்தலைவர் பதவிக்கு முன்பு, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா பிரிவின் தலைவராக இருந்தார்.

$ மேலும் சிட்டி ஹோல்டிங்க்ஸ், சிட்டி வெல்த் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பல சிட்டி குழும நிறுவனங்களின் தலைமை பொறுப்பு வகித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x