

இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் பல்வேறு சாதனை கள் முறியடிக்கப்பட்டுள்ளன என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் இந்தியா-அமெரிக்கா இன்னோவேஷன் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய அவர் மேலும் கூறியது: ராணுவ ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, வேளாண் துறை ஒப்பந்தமாக இருந்தாலும் சரி இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவு பல சாதனைகளை முறியடித்துள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட உள்ள ஒருமுக வரிவிதிப்பான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு துறையிலும் உச்ச பட்ச வர்த்தக ஒப்பந்தம் கையெழுத் தாகி சாதனை ஏற்படுத்தப்பட் டுள்ளது. கடந்த ஆண்டு இரு நாடு களிடையில் 10,900 கோடி டாலர் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ராணுவ ஒப்பந்தம் 1,500 கோடி டாலருக்கு கையெழுத்தாகி யுள்ளது. இது மிக அதிகபட்ச அளவாகும். ஒட்டுமொத்தமாக 600 கோடி டாலருக்கு வேளாண்துறை வர்த்தகமும் இதில் குறிப்பிடத் தக்கது. இதுவரையில் இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவு சுமூகமாகவே இருந்துள்ளது. இது இனிவரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் சமீபத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), வங்கி திவால் மசோதா, தேசிய அறிவுசார் சொத்துரிமை கொள்கை, அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு தளர்வு ஆகியன பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமின்றி இரு நாடு களிடையிலான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த உதவும்.
இரு நாடுகளிளும் பரஸ்பரம் தொழில் தொடங்கி நடத்துவதற்கு ஏற்ற சூழல் உருவாகும்போது அது பலனளிக்கும். இந்திய மாநிலங் களிடையே கூட்டாட்சி தனித்துவ வளர்ச்சி காணப்படுகிறது. இந்தியா தனது முழுமையான வளர்ச்சியை எட்டுவதை காண மிகுந்த ஆர்வமாக அமெரிக்கா உள்ளது.
இந்தியாதான் உலகிலேயே அதிவேக வளர்ச்சியைக் கொண்டுள்ள நாடாக திகழ்வதாக நம்புகிறது. இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான நடுத்தர மக்கள் உள்ளனர். பட்டதாரிகள் இங்கு அதிகம். பெரு நகரங்களும் இங்கு அதிகம் உள்ளன.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் 35 வயதுக்குட்பட்ட பிரிவினராக உள்ளனர். மேலும் கட்டமைப்புத் துறைகளில் மிக அதிக அளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாகவே இந்தியாவில் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது.
பொதுவாக அமெரிக்க நிறுவ னங்கள் இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை குறித்து புகார் தெரி விப்பதாக அனைவரும் கருதுகின் றனர். ஆனால் இந்தியாவில்தான் மிகச் சிறந்த அறிவுசார் சொத்துரிமை சூழல் நிலவுகிறது.
இந்தியாவில் வர்த்தக நடை முறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் அதேசமயம் தொழில்துறையினருக்கு அதிக அளவில் நிதி கிடைக்கச் செய்ய வேண்டும். தொழில் தொடங்க கொள்கைகளை எளிமையாக்கி யுள்ள அதே சமயம் நிதி கிடைப்ப திலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.
புதிய தொழில் முனைவுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். தொழில் முனைவோர்களுக்கு ஆதரவு தருவதில் பாலின பேதம் கூடாது. இங்கு அனைவருக்குமே சம வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. வசதி படைத்தவர்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன என்று கருதக் கூடாது.
இந்தியா அமெரிக்கா இடையே அணு சக்தியை பொது பயன்பாட்டில் உபயோகப்படுத்துவது தொடர் பான பேச்சுவார்த்தையில் சிறப் பான முன்னேற்றம் எட்டப்பட் டுள்ளது. ராணுவம், உற்பத்தித் துறையிலும் கணிசமான முன்னேற் றம் காணப்படுகிறது. இரு நாடு களும் பரஸ்பரம் ஆலோசனை அலு வலகங்களைத் தொடங்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் ரிச்சர்ட் வர்மா குறிப்பிட்டார்.