

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 16 சென்செக்ஸ் பங்குகளில் ரூ.17,000 கோடி முதலீடு செய்திருக்கின்றனர். அதே போல சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 13 பங்குகளில் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது தங்களுடைய பங்குகளை குறைத்துக்கொண்டுள்ளனர். ஒரு நிறுவனத்தின் தகவல் கிடைக்க வில்லை.
அதிக பட்சமாக டாக்டர் ரெட்டீஸ் லேப் நிறுவனத்தில் தங்களுடைய முதலீட்டை உயர்த்தி உள்ளனர். கடந்த மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர் களின் பங்கு 36 சதவீதமாக இருந் தது. ஆனால் ஜூன் காலாண்டு முடிவில் 6.58 சதவீதம் உயர்ந்து 42.58 சதவீதமாக அந்நிய நிறுவன முதலீட்டாளர் பங்கு உள்ளது.
ஆக்ஸிஸ் வங்கியிலும் கணிச மாக தங்களுடைய முதலீட்டை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் உயர்த்தியுள்ளனர். கடந்த மார்ச் காலாண்டில் 42.27 சதவீதமாக இருந்த அந்நிய முதலீடு ஜூன் காலாண்டில் 45.81 சதவீதமாக உள்ளது. தற்போதைய சந்தை மதிப்பு அடிப்படையில் 16 நிறு வனங்களில் ரூ.17,465 கோடி முதலீடு செய்துள்ளனர். 13 நிறு வனங்களில் ரூ.14,389 கோடியை வெளியே எடுத்துள்ளனர். நிகர முத லீடாக ரூ.3,076 கோடி உள்ளது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள இன்போசிஸ், டிசிஎஸ், ஹீரோ மோட்டோ கார்ப், டாடா மோட் டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் உள்ளிட்ட பங்குகளில் கடந்த ஜூன் காலாண்டில் அந்நிய முதலீடு உயர்ந்துள்ளது.