

பணப்புழக்கத்துக்கு மேலும் ரூ.1.15 லட்சம் கோடி தேவையாக உள்ளது என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கூடுதலாக 1.15 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தால்தான் பணப்புழக்க அளவை ஈடுசெய்ய முடியும். மார்ச் 24ம் தேதிவரையில் ரூ.13.12 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளது என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
மார்ச் 24ம் தேதிவரையில் ரூ.1.15 லட்சம் கோடி மட்டுமே ரிசர்வ் வங்கி அச்சடிக்க வேண்டியுள்ள தாகவும், அச்சிடும் வேலைகள் சீரான வேகத்தில் இருப்பதாகவும், இந்த பணிகள் ஏப்ரல் முதல் பதி னைந்து நாட்களுக்குள் முடிந்து விடும் என தான் நம்புவதாக எஸ்பிஐ வங்கியின் பொருளாதார ஆய்வு துறையின் தலைமைப் பொருளா தார ஆலோசகர் செளம்யா காண்டி கோஷ் தெரிவித்தார்.
2016ம் ஆண்டு நவம்பர் 4ம், தேதி நிலவரப்படி ரூ.17.97 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. பணப்புழக்கத்தை அதிகரித்த பிறகு ரூ.14.27 லட்சம் கோடி பணமதிப்பு சந்தையில் புழங்கும் என்றார்.
பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ரூபாய் நோட்டுகளை அச் சிடும்பணியில் ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை செய்தனர். இதனால்தான் பணமதிப்பு நீக்க நாட்கள் மிக விரைவாக சரி செய்யப்பட்டன.
பணமதிப்பு நீக்கத்துக்கு ஈடான தொகையை ரிசர்வ் வங்கி அடிக்க தேவையிருக்கவில்லை. ஏனென் றால் பணமதிப்பு நீக்கத்துக்கு முன்னதாக நாட்களில் அதிகப்படி யான பணப்புழக்கம் இருந்தது. இதற்காகத்தான் பணமதிப்பு நீக்கம் கொண்டுவரப்பட்டது.
சுமார் ரூ.1.17 லட்சம் கோடி மதிப்புக்கான பணம் அச்சடிக்க தேவையில்லை. பணமதிப்பு நீக்க காலகட்டத்தில் ரூ.2.50 லட்சம் கோடி அதிகப்படியான தொகை புழக்கத்தில் இருந்தது என்றும் குறிப்பிட்டார். மேலும் 1.20 லட்ச கோடி மதிப்புக்கான பரிவர்த்தனைகள் மின்னணு முறைக்கு மாறியுள்ளன என்றும் கூறினார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை பல வகைகளில் மின்னணு பரி வர்த்தனையை ஊக்குவித்துள் ளது. குறிப்பாக பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்கள், எம்-வாலெட் மற்றும் மொபைல் பேங்கிங் உள்ளிட்ட பல வகை மின்னணு பரிவர்த்தனைக்கு காரணமாக இருந்துள்ளது.
பணமதிப்பு நீக்க காலத்துக்கு பிறகு ஒரு நாளைக்கு 5,476 பாய்ண்ட் ஆப் சேல் இயந்திரங்கள் நிறுவப்படுவதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளி யிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிப்ப தாகவும் கூறினார்.
தற்போதைய நிலவரப்படி அனைத்து மின்னணு பரிவர்த் தனைகளுக்குமான அளவு ரூ.2.3 லட்சம் கோடி என்று கூறினார்.