நான்காவது வாரமாக பங்குச்சந்தைகள் சரிவு

நான்காவது வாரமாக பங்குச்சந்தைகள் சரிவு
Updated on
1 min read

கடந்த சில மாதங்களாக பங்குச்சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்தாலும், தொடர்ந்து நான்காவது வாரமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்தன. மேலும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மஹாராஷ்ட்ரா மற்றும் ஹரியாணாவில் இன்று வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளை கவனமாக எதிர்பார்க் கிறார்கள்.

சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்த அச்சமும், முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வர இருப் பதாலும் பங்குச்சந்தையில் சரிவு காணப்படுகிறது. இந்த சூழலை முதலீட்டுக்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அக்டோபர் 10-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துடன் ஒப்பிடும்போது அக்டோபர் 17-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சென்செக்ஸ் 0.71 சதவீதம் சரிந்து முடிந்தது. அக்டோபர்10-ம் தேதி சென்செக்ஸ் 26297 என்ற புள்ளியில் இருந்தது. அக்டோபர் 17-ம் தேதி 26108 புள்ளியில் முடிவடைந்தது.

மேலும் கடந்த வாரத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து 2,968 கோடி ரூபாய் முதலீட்டை விற்றுவிட்டார்கள். கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தைகள் உயர்ந்தாலும், 1,097 கோடி ரூபாய் பங்குகளை விற்றார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in