

சாம்சங் குழும தலைவர் ஜே வொய் லீ மீது லஞ்ச, ஊழல் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தென் கொரியாவின் சிறப்பு வழக்கறிஞர் அலுவலகம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
சாம்சங் குழும தலைவர் உள்ளிட்ட நான்கு முக்கிய தலைவர்கள் மீது மோசடி, திட்டமிட்ட ஊழல் வழக்குகள் செவ்வாய்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த வழக்கு தென் கொரிய நாட்டையே அரசியல் ரீதியாக உலுக்கிய வழக்காகும்.
லீ பிப்ரவரி 17ம் தேதி கைது செய்யப்பட்டார். தென் கொரிய அதிபராக இருந்த பார்க் குய்ன் ஹைக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவர்கள் மீதான விசா ரணையை விரைந்து முடிக்க நீதிமன்றம் கூறியிருந்தது. விசா ரணைக்கு பின் ஐந்து முக்கிய தலைவர்கள் மீது லஞ்சம், மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களது சொத்துகளும் முடக்கப்பட்டுள் ளன என்று சிறப்பு வழக்கறிஞரின் செய்தி தொடர்பாளர் தெரிவித் துள்ளார்.
லீ ஏற்கெனவே நாடாளு மன்றத்துக்கு பொய் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சாம்சங் குழுமத்தின் துணைத் தலைவர் சோய் கீ-சங், தலைவர் சாங் சூங்-கி, சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் பார்க் சங்-ஜின், செயல் துணைத் தலைவர் ஹவாங் சுங்-சூ உள்ளிட்டோரும் வழக்கு பதிவு செய்யபட்டோரில் அடங்குவர்.
இது குறித்து சாம்சங் நிறுவனத்தின் செய்தி தொடர் பாளர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
மார்ச் 6 ம் தேதி நடைபெறும் இறுதி விசாரணைக்கு பிறகு வழக்கின் தகவல்கள் உறுதியாக தெரிவிக்கப்படும் என்றும் வழக்கறிஞர் அலுவலகம் கூறியுள்ளது.