Published : 01 Jun 2017 09:59 AM
Last Updated : 01 Jun 2017 09:59 AM

நான்காம் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 6.1 சதவீதம்

இந்தியாவின் நான்காம் காலாண்டு ஜிடிபி வளர்சி 6.1 சதவீதமாக இருக்கிறது. கடந்த டிசம்பர் காலாண்டில் 7 சதவீத வளர்ச்சி இருந்தது. பண மதிப்பு நீக்கம் காரணமாக கட்டுமான துறையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல நிதிச்சேவை பிரிவிலும் வளர்ச்சி இல்லாததால் மார்ச் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கிறது. மார்ச் காலாண்டில் 7.1 சதவீத வளர்ச்சி இருக்கும் என சந்தை வல்லுநர்கள் கணித்திருந்த நிலையில் வளர்ச்சி குறைந்திருக்கிறது.

இதுவரை உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா இருந்தது. ஆனால் மார்ச் காலாண்டு வளர்ச்சியால் இந்தியா அந்த இடத்தை இழந்துவிட்டது. சீனாவின் மார்ச் காலாண்டு வளர்ச்சி 6.9 சதவீதமாகும்.

அதே சமயம் ஒட்டு மொத்த நிதி ஆண்டில் (2016-17) ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாக இருக்கிறது.

கடந்த நிதி ஆண்டில் உற்பத்தித் துறையில் 7.9% வளர்ச்சி இருக் கிறது. வர்த்தகம், ஓட்டல், போக்கு வரத்து, தொலைத்தொடர்பு சேவை கள் 7.8% அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றன. விவசாயம் 4.9% வளர்ச்சி அடைந்திருக்கிறது. சுரங்கத்துறை 1.8% வளர்ச்சி அடைந் திருக்கிறது. கட்டுமானத்துறை 3.7% குறைந்திருக்கிறது.

கடந்த 2014-15 மற்றும் 2015-16-ம் நிதி ஆண்டுகளின் வளர்ச்சி மறு மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. 2014-15-ம் நிதி ஆண்டின் வளர்ச்சி 7.2 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீத மாக உயர்த்தபட்டிருக்கிறது. அதே போல 2015-16-ம் நிதி ஆண்டின் வளர்ச்சி 7.9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக் கிறது.

நடப்பு நிதி ஆண்டில் இந்தியா வின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீத மாகவும், அடுத்த நிதி ஆண்டில் 7.7 சதவீதமாகவும் இருக்கும் என தரமதிப்பீட்டு நிறுவனமான மூடி’ஸ் கணித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x