

பெப்சிகோ இந்தியா நிறுவனம் உடனடி டிபன் தயாரிப்பில் இறங்கி யுள்ளது. மேலும் டிராபிகானா பழச் சாறு வரிசையில் புதிய பழச்சாற் றையும் அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் இவற்றை, நிறு வனத்தின் ஊட்டச் சத்து பிரிவு துணைத் தலைவர் தீபீகா வாரியார் அறிமுகப்படுத்தி கூறியதாவது:
தென்னிந்தியாவின் காலை உணவுகளில் மிகவும் விரும்பப் படும் இட்லி, தோசை, உப்புமா மற்றும் சிச்சடி வகைகளை க்வாக் கர் ஓட்ஸ் மூலம் உடனடி உணவு களாக தயாரிக்கலாம். க்வார்க்கர் நியூட்ரி புட்ஸ் மூலம் இந்திய காலை உணவில் பெப்சிகோ முக்கிய இடத்தை வகிக்க உள்ளது. பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு இவற்றை பாரம்பரிய சுவையில் தயாரித்துள்ளோம். தவிர டிராபிகானா பழச்சாறு வரிசையில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளோம். அந்த வரிசையில் அனைத்து பழங்கள் காய்கறிகள் சேர்ந்த பழச்சாறை இப்போது அறிமுகப்படுத்துகிறோம் என்றார்.
பெப்சி உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்பனை குறைந்துள்ளது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த தயாரிப்புகளை வழக்கமான வர்த்தக அமைப்பில் விற்பனை செய்வதுடன், ஆன்லைன் சந்தையிலும் கவனம் செலுத்துவோம் என்று கூறினார். க்வாக்கர் ஓட்ஸ் பெப்சிகோ நிறுவனத்தின் பிராண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.