தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக ஒரே சம்பளம்

தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக ஒரே சம்பளம்
Updated on
1 min read

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறு வனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சம்பளம் தொடர்ந்து 8 வருடங்களாக உயரவில்லை. சம்பளம் சலுகை என கடந்த 8 வருடங்களாக 15 கோடி மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இதர இயக்குநர்களின் சம்பளம் உயர்ந்திருக்கிறது.

நிறுவனத்தின் இயக்குநர் குழு ரூ.38.78 கோடி அளவுக்கு சம்பளத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது. இருந்தாலும் ஆண்டுக்கு ரூ.15 கோடி மட்டுமே சம்பளமாக எடுத்துக்கொண்டிருக்கிறார். தலைமைச் செயல் அதிகாரிகளின் சம்பளம் தொடர்ந்து உயர்ந்து வரு வதை அடுத்து, கடந்த 2009-ம் ஆண்டு தன்னுடைய சம்பளத் துக்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்தார்.

ஆனால் மற்ற இயக்குநர்களின் சம்பளம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. இவர் மனைவி நீதா அம்பானிக்கு ரூ.1.20 கோடி சம்பளமும், இயக்குநர் குழு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக கட்டணம் ரூ.6 லட்சமும் வழங்கப்பட்டிருக் கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in