

கடன்களுக்கான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 0.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடிப்படை வட்டி விகிதத்தை 9.8 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வட்டி விகிதம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்று எஸ்பிஜ அறிவித்துள்ளது. அடிப்படை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால், வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதமும் உயரும் என கூறப்படுகிறது.
சில் தினங்கஉக்கு முன்னர், இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்ளை மறு ஆய்வில் வங்கிகளுக்கான கடன் வட்டி 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, வாடிக்கையாளர்களின் கடன் வட்டியை பல்வேறு வங்கிகளும் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.