

டாடா குழுமத்தின் அங்கமான டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் தங்களிடம் உள்ள உபரி நிதியின் மூலம் சந்தையில் ரூ.10,278 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்கியுள்ளது.
பங்குகளை திரும்ப வாங்க ரூ.16 ஆயிரம் கோடியை இந்நிறு வனம் ஒதுக்கியிருந்தது. மே 18-ம் தேதி தொடங்கிய பங்குகளை திரும்ப வாங்கும் நடவடிக்கை யானது மே 31-ம் தேதி வரை நடை பெற்றது. ஒவ்வொன்றும் ரூ. 2,850 என்ற விலையில் மொத்தம் 5.61 கோடி பங்குகளை இந்நிறுவனம் திரும்ப வாங்கியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு களை திரும்ப வாங்கும் நடவடிக் கையில் சிறு முதலீட்டாளர் மத்தி யில் அதிக ஆர்வம் காட்டப்பட வில்லை. நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிட மிருந்து திரும்ப வாங்குவதென 4.7 கோடி பங்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. ஆனால் 12 கோடி பங்குகளை விற்க இப்பிரிவினர் ஆர்வம் தெரிவித்திருந்தனர்.
இந்திய ஐடி நிறுவனங்கள் வசம் கூடுதலாக நிதி வளம் உள்ளது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நிறுவனமும் பங்குகளை திரும்ப வாங்க முடிவு செய்தன. இன்ஃபோசிஸ் நிறுவனமும் ரூ. 13 ஆயிரம் கோடி தொகையை டிவிடெண்ட் மற்றும் பங்குகளை திரும்ப வாங்கும் நடவடிக்கைக்கு ஒதுக்கியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் காக்னிசன்ட் நிறுவனம் 340 கோடி டாலர் தொகைக்கு பங்குகளை திரும்ப வாங்க முடிவெடுத்தது. இதேபோல ஹெச்சிஎல் நிறுவனமும் 3.50 கோடி திரும்ப வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கென ரூ. 3,500 கோடியை இந்நிறுவனம் ஒதுக்கியுள்ளது.