

பேங்க் ஆப் இங்கிலாந்தின் கவர்னர். 2013-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
ஜி20 அமைப்பின் நிதி ஸ்திரத்தன்மை குழுவின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
அமெரிக்காவின் பன்னாட்டு வங்கியான கோல்டுமேன் சாக்ஸ் வங்கியில் கேபிடல் மார்க்கெட்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குநராக இருந்தவர்.
மேலும் இதே நிறுவனத்தில் இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங் பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார்.
2003-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை பேங்க் ஆப் கனடாவின் துணை கவர்னராக இருந்தவர். 2008-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டு வரை இதே வங்கியின் கவர்னராக இருந்தவர்.
அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் இளங்கலை பட்டமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவர்.