

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைந்து வரும் சூழ்நிலையில் ஏரோவாய்ஸ் என்னும் புதிய நிறுவனம் தொடங்கப்பட இருக்கிறது. மொபைல் பேமென்ட் நிறு வனமான ஆட்பே நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஏரோவாய்ஸ் செயல்படும்.
ஏப்ரல் 14-ம் தேதி முதல் சேவை தொடங்கும் என அந்நிறுவனத் தின் தலைமைச் செயல் அதிகாரி சிவகுமார் குப்புசாமி தெரிவித்தார். முதல் ஆண்டில் 5 லட்சம் வாடிக் கையாளர்களை ஈர்க்க திட்டமிடப் பட்டிருக்கிறது. அடுத்த 3 ஆண்டு களில் ரூ.300 கோடி முதலீடு செய் யப்பட இருக்கிறது. இதன் மூலம் நேரடியாக 1,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எம்விஎன்ஓ முறையில் செயல் படும் முதல் நிறுவனம் இதுவாகும். அதாவது ஏற்கெனவே சந்தை யில் செயல்பட்டு வரும் நிறுவனங் களின் பயன்படுத்தப்படாத ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வாங்கி இந்த நிறுவனம் பயன்படுத் தும். இதற்கு என்விஎன்ஓ என்று பெயர். அதேபோல இந்த நிறு வனம் ஏற்கெனவே செயல்படும் செல்போன் கோபுரங்களையும் பயன்படுத்த முடிவெடுத்திருக் கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்தது.