Published : 10 Aug 2016 10:44 AM
Last Updated : 10 Aug 2016 10:44 AM

நிலவில் மனித சாம்பலை புதைக்க 30 லட்சம் டாலர் கட்டணம்: 2017-ல் வர்த்தக சேவையை தொடங்கும் மூன் எக்ஸ்பிரஸ்

கடந்த வாரத்தில் `மூன் எக்ஸ் பிரஸ்’ என்ற தனியார் நிறுவனம் சந்திரனுக்கு விண்கலம் மூலம் பயணம் மேற்கொள்ள அமெரிக்க விமான போக்குவரத்துக் கழகத் திடம் அனுமதி பெற்றுள்ளது. வர்த்தக ரீதியான இந்த பயணத் தில் மனித சாம்பலை நிலவுக்கு எடுத்துச் செல்லவும் அந்த நிறு வனம் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தில் மனித சாம்பலை ஏற்றிச்செல்ல ஒரு கிலோவுக்கு 30 லட்சம் டாலர் என கட்டணத்தை இந்நிறுவனம் நிர்ணயித்துள் ளது.

மூன் எக்ஸ்பிரஸ் என்கிற அந்த நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த நவீன் ஜெயின் மற்றும் பாப் ரிச்சர்ட்ஸ் ஆகியோரால் தொடங்கப்பட்டது. 2017ல் நில வில் தரையிறங்குவதற்கான பயண திட்டத்தை திட்டமிட்டுள் ளது. விண்வெளி பயணத்துக்கு முதன் முதலில் அனுமதி வாங்கிய தனியார் நிறுவனம் இதுவாகும். ரோபோட்டிக் முறையிலான இந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இறங்க அமெரிக்க விமான கொள்கை வகுக்கும் துறையினர் அனுமதி அளித்துள்ளனர் என்று நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து செய்தி வெளியிட் டுள்ள நியூயார்க் போஸ்ட் ‘மூன் எக்ஸ்பிரஸ்’ வர்த்தக ரீதியாகவும் செயல்பட உள்ளது என்றும், மூன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் மனித சாம்பலை நிலவுக்கு எடுத்து செல்வதற்கான திட்டத்தை வைத் துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக நியூயார்க் போஸ்ட்-க்கு பேசிய நவீன் ஜெயின், மனித சாம்பலை நிலவில் புதைக்க எடுத்துச் செல்வதற்கு ஒரு கிலோவுக்கு 30 லட்சம் டாலர் கட்டணமாக நிர்ணயித்துள் ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவாக உடல் தகனத்துக்குப் பிறகு பெரியவர்களின் சாம்பல் எடை 4 முதல் 6 பவுண்ட் வரை இருக்கும். இதனால் மனித சாம்பலை நிலவில் புதைப்பதற்காக 54 லட்சம் டாலர் முதல் 81 லட்சம் டாலர் வரை கட்டணமாக இருக் கும் என்றும் நியூயார்க் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. இந்த சேவைக் கும் இப்போதே தேவை அதிகரித் துள்ளது. ஏற்கெனவே முன்பதிவு செய்துள்ளவர்களின் பட்டியலே நீண்டுள்ளது என்றும் ஜெயின் கூறியுள்ளார்.

பூமி சுற்று வட்டப்பாதைக்கு வெளியே விண்வெளியில் பயணம் மேற்கொள்ள இதுவரை தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

மூன் எஸ்பிரஸ்க்கு வானத்தில் எல்லையேயில்லை, விண்வெளி பயணம் என்பது எங்களது பாதை தான், ஆனால் அடுத்த தலை முறைக்கு எல்லையில்லாத வாய்ப் புகளை உருவாக்கிக் கொடுப்ப தாக இந்த பயணம் அமையும் என்று மூன் எக்ஸ்பிரஸின் இணை நிறுவனர் நவீன் ஜெயின் கூறியுள் ளார். இந்த பயணத்தில் நிலவில் உள்ள உலோகங்கள், நிலவின் பாறைகளோடு திரும்ப உள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x