பண மதிப்பு நீக்க நடவடிக்கை சிறு, குறுந்தொழில் துறை பாதிப்பு: அசோசேம் அறிக்கை தகவல்

பண மதிப்பு நீக்க நடவடிக்கை சிறு, குறுந்தொழில் துறை பாதிப்பு: அசோசேம் அறிக்கை தகவல்
Updated on
2 min read

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறு, குறுந்தொழில் துறை (எஸ்எம்இ) கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் நுகர்வு தேவை குறைந்துள்ளது. வேலை உருவாக்கம் தடைப்பட் டுள்ளது என்று தொழில்துறை அமைப்பான அசோசேம் வெளி யிட்ட அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

இந்த நடவடிக்கையால் முறைசார் தொழில்களில் நீண்ட காலத்தில் பலன் கிடைக்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசு நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை என தெரிவித்த மத்திய அரசு பின்னர் மக்கள் மின்னணு பண பரிவர்த்தனைக்காக இது மேற் கொள்ளப்படுவதாகக் கூறுகிறது.

இந்த நடவடிக்கையால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிராமப்புற நுகர்வு குறைந்துள்ளது. வேலை உருவாக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பெரிய நிறுவனங் களுக்கு இந்த நடவடிக்கையால் நீண்ட கால அடிப்படையில் பலன் கிடைக்கும் என்று பிஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து அசோசேம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு இன்னமும் நீடிக்கிறது. இந்த பாதிப்பு இன்னும் ஒரு காலாண்டு நீடிக்கும் என்று தெரிகிறது. இத்துறையைச் சேர்ந்த 81.5 சதவீதம் பேர் இதே கருத்தை வெளியிட்டுள்ளனர். அதேசமயம் இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை பெரிய நிறுவனங்களுக்கு சாதக மாக அமைந்துள்ளதாக ஆய்வ றிக்கை தெரிவிக்கிறது.

இந்த நடவடிக்கையால் முதலீடு கள் பாதிக்கும் என 66 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். நுகர்வோர் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பகத் தன்மை குறைந்து போனதால் பொருள்களுக்கான தேவை குறையும். குறிப்பாக இது கிராமப்பகுதிகளில் அதிக மாக இருக்கும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண் டின் கடைசி காலாண்டில் விற்பனை அளவு மிகக் கடுமையான சரிவு இருக்கும் என்றும், இதே போல புதிய பொருள்களுக்கான முன்பதி வும் கடுமையாகக் குறையும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பணத் தட்டுப்பாடு காரணமாக காய்கறி உள்ளிட்ட பொருள்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இதன் விளைவு பணவீக்கத்தில் குறிப்பிட்ட அளவு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

நாட்டின் பொருளாதார சூழலில் ஏற்ற, இறக்க நிலை காணப்படும்போது பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்பு எந்த அளவு என்பதை அறுதியிட்டு கூற முடியாது என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆனாலும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் விளைவு நன்மையா அல்லது பாதிப்பா என்பதை வரையறுக்க முடியாது என்று அசோசேம் செயலர் டி.எஸ். ராவத் தெரிவித்துள்ளார்.

இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை சில துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். சில துறைகள் இதிலிருந்து தப்பித்து விடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

துறை வாரியாக குறிப்பிடும் போது வேளாண்துறை, சிமென்ட், உரம், ஆட்டோமொபைல், ஜவுளி, ரியல் எஸ்டேட் துறைகளில் பாதிப்பு ஏற்படும் என்றும். மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, பார்மா, தகவல் தொழில்நுட்பம், மின்னணு, கட்டமைப்புத் துறை களில் சாதக அம்சங்கள் இருக்கும் என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in