Last Updated : 04 Jan, 2017 10:56 AM

 

Published : 04 Jan 2017 10:56 AM
Last Updated : 04 Jan 2017 10:56 AM

இரு சக்கர வாகனங்களுக்கான சிஎன்ஜி சிலிண்டர், உபகரணங்களுக்கு ஒப்புதல்

சுற்றுச் சூழலைக் காக்கும் நோக்கில் நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் (சிஎன்ஜி) இயங்கும் ஸ்கூட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிஎன்ஜி நிரப்புவதற்கான பாது காப்பான சிலிண்டர்களை தயா ரித்த லவாடோ நிறுவனத் தயாரிப்பு களுக்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. இந்த சிலிண்டர்கள் ஒவ் வொன்றிலும் 1.20 கிலோ வாயுவை நிரப்ப முடியும். இதன் மூலம் 120 கி.மீ முதல் 130 கி.மீ தூரம் வரை செல்ல முடியும்.

சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான தாகவும் அதே சமயம் எரிபொருள் சிக்கனமானதாகவும் சிஎன்ஜி இருக் கும். ஒரு கி.மீ. தூரம் ஓட 60 காசு களே செலாவகும்.

சிஎன்ஜி சிலிண்டர் மற்றும் வாயுவை சப்ளை செய்யும் உபகர ணங்களை லவோடா நிறுவனம் தயாரிக்கிறது. இது தவிர ஐடியுகே நிறுவனத் தயாரிப்புகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள் ளது. சிஎன்ஜி சிலிண்டர்கள் மற்றும் அதற்குரிய உபகரணங்கள் பரி சோதனைக்குப் பிறகே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை புணேயில் உள்ள ஏஆர்ஏஐ மற்றும் குர்காவ்னில் உள்ள ஐசிஏடி அமைப்புகள் அளித்துள்ளன.

லவோடா நிறுவனம் 18 ஸ்கூட்டர் மாடல்களுக்கேற்ற சிஎன்ஜி சிலிண் டர் மற்றும் உபகரணங்களை (சிஎன்ஜி கிட்) தயாரிக்க அனுமதி பெற்றுள்ளது.

சிஎன்ஜி சிலிண்டர் மற்றும் உப கரணங்களுக்கான தேவை அதி கரிக்கும் என எதிர்பார்க்கப்படுவ தால் இத்தகைய கருவிகள் உற் பத்தியில் மேலும் பல நிறுவனங் கள் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x