

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 57% சரிந்து ரூ.2,260 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 5,254 கோடியாக இருந்தது.
டாடா மோட்டார்ஸின் அங்க மான ஜேஎல்ஆர் நிறுவனத்தின் லாபம் பிரெக்ஸிட் விவகாரத் தால் கடுமையாக பாதிக்கப் பட்டது. இதனால் நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் குறைந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் ஒருங்கிணைந்த விற்பனை 10 சதவீதம் அதிகரித்து வருமானம் ரூ.66,101 கோடியைத் தொட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் விற்பனை வருமானம் ரூ.60,093 கோடியாகும்.
நிறுவனத்தின் பங்குகள் 4.24 சதவீதம் அதிகரித்து ரூ. 514.70 என்ற விலையில் வர்த்தகமாயின.