Published : 17 Oct 2014 10:30 AM
Last Updated : 17 Oct 2014 10:30 AM

சசி ரூயா - இவரைத் தெரியுமா?

$ எஸ்ஸார் குழுமத்தின் தலைவர். உருக்கு, எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், தொலைத்தொடர்பு என பல துறைகளில் செயல்பட்டு வருகிறது எஸ்ஸார் குழுமம். போர்ப்ஸ் தகவல்படி இவரது சொத்துமதிப்பு 590 கோடி டாலர்.

$ 1965-ம் ஆண்டு தன்னுடைய அப்பாவின் வழிகாட்டுதலோடு வியாபாரத்தில் இறங்க, ஒரு எஸ்ஸார் குழுமத்தை உருவாக்கினார். 25க்கும் மேற்பட்ட நாடுகளில் 75,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகிறார்கள்.

$ இவரது சகோதரர் ரவி ரூயா. இவர் இந்த குழுமத்தின் துணைத்தலைவர். இவர்கள் 13 என்ற எண்ணை அதிர்ஷ்டமாக நினைப்பவர்கள். மேலும் இவர்கள் இருவரும் ஒன்றாக பயணம் செய்யமாட்டார்கள்.

$ 2010-ம் ஆண்டு இவர்களது எஸ்ஸார் எனர்ஜி நிறுவனத்தை லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிட்டார்கள். ஆனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்ததால் கடந்த ஜூன் மாதம் பட்டியலிடப்பட்டதை விட 80 சதவீத தள்ளுபடியில் நிறுவனத்தை டீலிஸ்ட் செய்தார்.

$ ஃபிக்கி, இந்திய அமெரிக்க பிஸினஸ் கூட்டமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகளில் செயல்பட்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x