Last Updated : 11 Jan, 2017 10:37 AM

 

Published : 11 Jan 2017 10:37 AM
Last Updated : 11 Jan 2017 10:37 AM

செயல்பாடு அடிப்படையில் ஊக்கத் தொகை பரிந்துரை: வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு

வங்கிப் பணியாளர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் ஊக்கத் தொகை (இன்சென்டிவ்) அளிக்கும் பரிந்துரைக்கு வங்கி ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பொதுத்துறை வங்கிப் பணியாளர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் ஊக்கத் தொகை அளிக்கலாம் என்று வங்கி வாரிய குழுவின் தலைவர் வினோத் ராய் சமீபத்தில் பரிந்துரை செய்திருந்தார்.

இத்தகைய நடவடிக்கையை தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் ஹர்வீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இம்மாத தொடக்கத்தில் வங்கி வாரிய தலைமை கூடியபோது பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை மேம்படுத்த பணியாளர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் ஊக்கத் தொகை அளிக்கலாம் என பரிந்துரைப்பதாக வினோத் ராய் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக ஹர்வீந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த பரிந்துரையானது ஒரு முன்னோட்டம்தான். அடுத்த கட்ட மாக சி2சி எனப்படும் முறையில் ஊதியம் நிர்ணயிக்கப்படும். இதனால் ஊதிய உயர்வு, அலவன்ஸ் உள்ளிட்ட பிற சலுகைகள் மறுக்கப்படும். இதைப் படிப்படியாகக் கொண்டு வரு வதற்கு முன்னோட்டமாக `செயல் பாடுகள் அடிப்படையில் ஊக்கத் தொகை’ என்ற பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கித் துறையின் பல்வேறு நிலைகளிலான பணிகள் ஒவ் வொரு பணிக்கும் மாறும். இவை அனைத்தையும் ஒரே மாதிரியான அளவுகோலால் மதிப்பீடு செய்ய முடியாது. இத்தகைய அளவீட்டு முறை வங்கித்துறைக்குப் பொருந் தாது. வங்கிகளில் பன்முக செயல்பாடுகள் உள்ளன. ஒரு வங்கிக் கிளையை நிர்வகிப் பது மற்றும் வங்கியின் செயல் பாடுகளில் பின்புலத்திலிருந்து இயக்குவது என பல்வேறு நிலை கள் உள்ளன. வங்கியின் அன்றாட செயல்பாடு, நிர்வாகம் மற்றும் வங்கியின் பின்புலத்திலிருந்து கொள்கை வகுப்பது, சேவை அளிப்பது உள்ளிட்ட பணிகள் ஒவ்வொரு பணியாளருக்கும் மாறுபடும்.

ஒரே மாதிரியான அளவு கோலின் அடிப்படையில் வங்கிப் பணியாளரின் செயல்பாடுகளைத் தீர்மானிக்க முடியாது. இவ்விதம் செயல்பாடு அடிப்படையில் ஊக்கத் தொகை அளித்தால் சக ஊழியர்கள் மத்தியில் மனக் கசப்பு உருவாகும். தனது சக பணியாளருக்கு எதிராக செயல் படும் நிலைக்கு தள்ளப்படுவர் என்று ஹர்வீந்தர் சிங் சுட்டிக் காட்டியுள்ளார்.

``வங்கியில் சில குறிப்பிட்ட பணிகள் அங்கீகாரம் பெறாம லேயே போய்விடுகின்றன. அதில் குறிப்பாக வங்கியின் உதவியாளர் பணி குறிப்பிடத்தக்கது என்று தேசிய வங்கி பணியாளர் கூட்ட மைப்பின் துணைத் தலைவர் அஸ்வினி ராணா குறிப்பிட்டுள் ளார்.

``செயல்பாடுகள் அடிப்படை யில் ஊக்கத் தொகை வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்தால் பணியாளர்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வு நிலை உருவாகும். அதேசமயம் பாரபட்சமான அணுகு முறை அதாவது வங்கி உயர் அதிகாரி தனக்கு வேண்டியவருக்கு அதிக ஊக்கத் தொகையும், வேண்டாதவர் சிறப்பாக செயல் பட்டாலும் அவருக்கு ஊக்கத் தொகை வழங்காத நிலையும் உருவாகும்,’’ என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மத்திய அரசு பணியாளர் களுக்கு பரிந்துரைத்ததைப் போன்ற 7-வது ஊதியக் குழு பரிந்துரையைக் காட்டிலும் கூடுதல் சலுகைகள் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இப்போது செயல்பாட்டில் உள்ளது. அதை நடைமுறைப்படுத்து வதுதான் வங்கிக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் சிறந்தது என்று ராணா குறிப்பிட்டார்.

வங்கிப் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு, வங்கியின் அனைத்து நிலை பணியாளர் களுக்கும், பழைய தலைமுறை தனியார் வங்கிப் பணியாளர் களுக்கும் பொருந்தும் வகையில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதனிடையே வங்கியாளர்கள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர் சம்மேளனங்களை கலைக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. தொழிலாளர் விரோத நடவடிக்கை மற்றும் சங்கங்களைக் கலைக்கும் முயற்சியை வங்கியாளர் கூட்ட மைப்பு கடுமையாக எதிர்ப்பதாக அவர் கூறினார்.

வங்கி ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x