

சூரிய ஒளி மின்சாரம் மூலம் தங்கள் மின் தேவையை ஈடுகட்ட தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்திய சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி (எஸ்இசிஐ) நிறுவனத்துடன் தில்லி மெட்ரோ ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களுக்குத் தேவையான மின்சாரம் சூரிய ஆற்றல் மூலம் ஓரளவு பூர்த்தி செய்யப்படும். இந்த நடவடிக்கை மூலம் சுற்றுச் சூழலையும் காக்க தில்லி மெட்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி தில்லி மெட்ரோ ரயில் நிலைய கூரைகளில் சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி பலகைகளை அமைப்பது. காலியான இடங்களில் சூரிய ஒளி பலகைகளை நிறுவுவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக ஒரு ரயில் நிலையத்தின் மேற்கூரையில் சூரிய ஒளி பலகைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.