

நடப்பு நிதியாண்டில் இந்திய பொரு ளாதாரத்தின் வளர்ச்சி மந்தமான நிலையில் இருக்கும் என்று சர்வதேச வங்கியான ஹெச்எஸ்பிசி தெரிவித்துள்ளது. சர்வதேச அள வில் தேவை குறைவாக இருப்ப தாலும் முதலீட்டாளர்கள் ரிஸ்க் எடுப்பதற்கு தயாரான சூழ்நிலை யில் இல்லாததாலும் இந்திய பொரு ளாதாரம் மிக மந்தமான வேகத்தி லேயே வளர்ச்சி அடையும் எனவும் ஹெச்எஸ்பிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும் ஹெச்எஸ்பிசி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலக அளவில் தேவை குறைவாக இருப்பது, வங்கித் துறை வாராக் கடன் பிரச்சினை, உள்நாட்டு தனியார் முதலீடுகள் மந்தமான சூழ்நிலையில் இருப்பது, கச்சா எண்ணெய் மெதுவாக விலை ஏற்றம் கண்டு வருவது ஆகிய காரணங்களால் இந்திய பொருளாதார வளர்ச்சி மந்தமாக நிலையிலேயே இருக்கும்.
இதையெல்லாம் வைத்து பார்க் கும் போது ஜிடிபி வளர்ச்சி கடந்த வருடத்தில் இருந்த 7.6 சதவீத வளர்ச்சியிலிருந்து நடப்பு நிதி யாண்டில் 7.4 சதவீத வளர்ச்சியை அடையும் என நாங்கள் எதிர்ப் பார்க்கிறோம். இந்திய பொருளா தார வளர்ச்சி குறைவாக இருந்த போதிலும் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் பொருளா தாரமாக இந்தியா இருக்கும்.
நகர்புற நுகர்வோர் தேவை அதிகமாக இருந்ததினால் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.9 சதவீதமாக இருந்தது.
ஜிடிபி கணக்கிடும் முறையில் சிக்கல் உள்ளது. இதற்கிடையில் ஜிடிபி வளர்ச்சிக்கு சாதகமாக சில காரணிகளும் இருக்கின்றன. மத்திய அரசு அளித்துள்ள ஊதிய உயர்வு நகர்புற நுகர்வோர் தேவையை அதிகரிக்கும். பருவமழை கிராமப்புறங்களில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். இது போன்ற காரணிகள் ஜிடிபி வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளன.
கிடப்பில் உள்ள சீர்திருத்தங் களை நடைமுறைக்கு கொண்டு வந்தால் இடைக்காலத்தில் இந்தி யாவின் வளர்ச்சி வேகமாக இருக் கும் என்று நாங்கள் எதிர்பார்க் கிறோம். ஆனால் பருவமழை தாமதமாக வந்தால் கிராமப்புற வருமானத்தை பாதிக்கும். இது இந்தியா இடைக்கால வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் வங்கித்துறையில் நடைபெற்று வரும் சீர்திருத்தங்கள், ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் சூழ்நிலை போன்ற காரணங்களாலும் இந்தியாவின் இடைக்கால வளர்ச்சி பாதிப் படையும்.
மேலும் பருவமழை போது மானதாக இருந்து தற்போது விலையேற்றம் கண்டு வரும் உணவுப் பொருட்கள் விலை கட்டுக்குள் வந்தால் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் ரெப்போ விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜுன் மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்த வருடம் பருவமழை நன்றாக இருந்து பணவீக்கத்தை குறைக்க உதவினால் வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பிருப்பதாகவும் சூசகமாக தெரிவித்தார். ரிசர்வ் வங்கி முதலீட்டை ஊக்கப்படுத்து வதற்காக வட்டி விகிதத்தை குறைக்கும் என்று தொழில் துறையினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.