

டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் கிளேடன் நிறுவனம் அமெரிக்காவில் தன்னுடைய முதல் ஆலையை தொடங்குகிறது. இந்த ஆலை ரூ.350 கோடியில் அமைய இருக்கிறது. தவிர இந்தி யாவிலும் ரூ.400 கோடி அளவி லான விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு தேவையான அலுமினிய பாகங்களை இந் நிறுவனம் தயாரிக்கிறது. சென்னை யில் மூன்று ஆலையும், ஓசூரில் ஒரு ஆலையும் இந்த நிறுவனத்துக்கு உள்ளன.
இந்தியாவில் மேற்கொள்ள இருக்கும் விரிவாக்கப் பணிகள் காரணமாக 60,000 டன்னாக இருக்கும் உற்பத்தி 70,000 டன்னாக உயரும் என நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் லஷ்மி வேணு தெரிவித்தார்.
அமெரிக்காவின் தெற்கு கரோ லினா மாகாணத்தில் 50 ஏக்கரில் இந்த ஆலை அமைய இருக்கிறது. கட்டுமானப் பணிகள் வரும் ஏப்ரலில் தொடங்கும். 2018-ம் ஆண்டின் இறுதியில் இந்த ஆலை செயல்படத்தொடங்கும். ஆண்டுக்கு 10,000 டன் உற்பத்தி செய்ய முடியும். இந்த ஆலை மூலம் 130 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அமெரிக்காவில் ஆட்டோமொபைல் மற்றும் உற்பத்தி துறைக்கு ஏற்ற மாகாணம் தெற்கு கரோலினா. அதனால் அந்த மாகாணத்தில் எங்கள் ஆலையை அமைக்கிறோம் என்றும் லஷ்மி வேணு தெரிவித்தார்.
சுந்தரம் கிளேடன் நிறுவனத்தின் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.