

கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகளால் மட்டுமே கறுப்புப் பண புழக்கத்தை ஒழித்து விட முடியாது என்று ரிசர்வ் வங்கி யின் முன்னாள் கவர்னர் ஒய்.வி. ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த ``இந்திய பொருளாதாரம்: புதிய சவால்களும்,வாய்ப்புகளும்,’’- என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பேசுகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
மத்திய அரசு இதற்கு முன்பு மேற்கொண்டிராத வகையிலானது தான் சமீபத்தில் மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை, கடுமையான நடவடிக்கை மற்றும் தண்டனைகளால் மட்டுமே கறுப்புப் பண புழக்கத்தைத் தடுத்து விட முடியாது. நமது பொருளா தாரத்தைப் பொறுத்தமட்டில் கடுமையான சட்டதிட்டங்கள் அனைத்துமே விதிமீறல்களுக்கு வழிவகுத்துவிட்டன. அனைவரும் ஏற்கக் கூடிய பொதுவான விதி கள் மற்றும் சிறப்பான நேர்மை யான நிர்வாகம் மூலமே கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும். பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்க வழி ஏற்படுத்தியது. இதன் மூலம் ஒரு காலத்தில் பணம் செலவிடும் வழிவகைகளை கண்டுபிடிக்க முடியாதிருந்த சூழல் தற்போது மாறியுள்ளது.
நூறு கோடி மக்கள் அரசின் நடவடிக்கையால் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு அலைக்கழிக்கப் பட்டனர். இதுபோன்ற நிகழ்வு வேறு எந்த நாட்டிலும் நிகழ்ந் தது கிடையாது. பணப் புழக்கம் பழைய நிலைக்குத் திரும்பிய பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை குறைந்துவிட்டது. இதற்குக் கார ணம் டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூலிக்கப்படும் கட்டணமே. இவற்றைக் குறைப்பது மிகவும் அவசியமானதாகும.
கறுப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பான விவாதம் இன்னும் முழுமையாக, போதுமான அளவு நடத்தப்படவில்லை. தண்டனை எந்த அளவுக்குத் தரலாம் என்று விவாதிக்கப்பட வில்லை. அப்படி யிருக்கையில் கறுப்புப் பணத்தை எப்படி ஒழிக்க முடியும். கறுப்புப் பணத்தை ஒழிப்பது குறித்த கருத்து கள் மக்களிடம் கேட்டறியப்பட வேண்டும் என்றார்.
14-வது நிதிக் குழுவின் தலைவராக பொறுப்பு வகித்த ரெட்டி, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், இது அமல்படுத் துவதால் குறுகிய காலத்துக்கு பொருளாதாரத்தில் சில அசவுகரி யங்கள் ஏற்படும் என்றார். சில மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியில் சமச்சீரற்ற நிலை காணப்படும் என்று குறிப்பிட்ட அவர், வளர்ச்சியடைந்த மாநிலங் கள் மிக அதிக வளர்ச்சியை எட்டும். இதனால் மாநிலங்களின் வளர்ச்சியில் சமச்சீரற்ற நிலை காணப்படும்.
மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்ய மத்திய அரசு உத்திரவாதம் அளித்தாலும், இது வளர்ச்சிக்கான வாய்ப்பை முற்றாக தடுத்து நிறுத்திவிடும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
மாநில அரசுகளும் மத்திய அரசு களும் சமச்சீரான வரி வருவாய் ஈட்ட வேண்டும் என நினைத்தால் தற்போது அதிகபட்சமாக நிர்ண யிக்கப்பட்டுள்ள வரி அளவு 28 சத வீதத்திலிருந்து 40 சதவீத அளவுக்கு உயர்த்த வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.