

சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன் நிறுவனம் 3 ஸ்டார்ட்அப் நிறுவனங் களில் முதலீடு செய்ய உள்ளது. விற்பனைக்கு பிறகான சேவையில் கவனம் செலுத்தும் விதமாக முதலீடு களை மேற்கொள்வதாக நிறுவனத்தின் செயல் இயக்குநர் னிவாச ராகவன் தெரிவித்தார்.
ஆன்லைன் மூலம் ஆட்டோ மொபைல் உதிரிபாகங்களை விற் பனை செய்துவரும் `ஜாஸ்மை ரைட் டாட் காம்’, தகவல் திரட்டு நிறுவனமான `ஆட்டோசென்ஸ்’, வாகன பாதுகாப்பு தொழில்நுட் பங்களை வழங்கும் `ரெட்சன்’ என மூன்று நிறுவனங்களிலும் ரூ.75 கோடி முதலீடு செய்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த நிறு வனங்கள் ரூ.250 கோடி வரை வரு மானம் ஈட்டும் என எதிர்பார்ப்ப தாகவும், இந்த முதலீடுகள் மூலம், விற்பனைக்குப் பிறகான சேவை துறையில் டிஜிட்டல் டெக்னாலஜி மூலம் வாடிக்கையாளர்களுக்கு உதவ முடியும் என்றும் தெரிவித்தார்.