

வெளிநாடுகளில் மிகவும் பரபரப்பாக விற்பனையாகி வரும் ஆப்பிள் ஐ-போன் 6-க்கான முன்பதிவு இந்தியாவில் இன்று தொடங்குகிறது. இந்த மாடல் போன்கள் இம்மாதம் 17-ம் தேதி முதல் அனைத்து விற்பனை யகங்களிலும் கிடைக்கும்.
உயர் ரக ஐ-போன்களை இறக்குமதி செய்யும் அங்கீகாரம் பெற்ற விற்பனை நிறுவனமாக இன்கிராம் மைக்ரோ நிறுவனம் திகழ்கிறது. இந்நிறுவனம் ஆப்பிள் ஐ-போன் 6-க்கான முன்பதிவு இன்று தொடங்குவதாக அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் ஐ-போன் 6 மற்றும் ஐ-போன் 6 பிளஸ் ஆகிய இரு மாடல்களில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து விருப்பப்பட்டால் முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 24 நகரங்களில் உள்ள 1,200 விற்பனையகங்கள், இணையதளம் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.