

பொதுத்துறை நிறுவனமான பாரத் மிகுமின் நிறுவனத்துக்கு (பிஎச்இஎல்) ரூ. 3,000 கோடிக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் தேசிய அனல் மின் நிறுவனம் (என்டிபிசி) அமைக்க உள்ள மின் நிலையத்துக்கான பணிகளை பிஎச்இஎல் நிறுவனம் நிறைவேற்றித் தர வேண்டும்.
ஒவ்வொன்றும் 800 மெகாவாட் திறன் கொண்ட 2 நீராவி ஜெனரேட்டர்களை தயாரித்து அளிக்க வேண்டும். ஒடிசா மாநிலத்தில் தார்லிபாலி எனுமிடத்தில் இந்த அனல் மின் நிலையம் அமைய உள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களின் போட்டிக்கிடையே இந்த ஒப்பந்தம் பிஎச்இஎல் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. வடிவமைப்பது, உற்பத்தி செய்வது, விநியோகித்து அதை நிர்மாணிப்பது, இயக்கி செயல்படுத்துவது உள்ளிட்டவை இந்த ஒப்பந்தப் பணியில் அடங்கும். அனல் மின் நிலையங்களுக்கான பாய்லர்கள் பிஎச்இஎல் நிறுவனத்தின் திருச்சி, ராணிப்பேட்டை, போபால், ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆலைகளில் தயாரிக்கப்பட உள்ளன.