

பிட் காயின் உபயோகம் சட்ட விரோதமானது என்று மாநிலங் களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேகவால் தெரிவித்தார். இதை உபயோகிப்பவர்கள் மீது நிதி மோசடி சட்டம் பாயும் என்றும் அவர் கூறினார்.
பாரத ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்த மெய் நிகர் பணம் (விர்ச் சுவல் கரன்சி) எனப்படும் பிட் காயின் பரிவர்த்தனையை அங்கீ கரிக்கவில்லை இதனால் இத் தகைய பண பரிவர்த்தனை செய்வோர் மீது நிதி மோசடி சட்டம் பாயும் என்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் கூறினார்.
இது தொடர்பாக ஆர்பிஐ ஏற்கெனவே பிட்காயின் உபயோகிப் பாளர்களை எச்சரித்துள்ளது. இதை பயன்படுத்துவோர், இதை வைத்திருப்போர், வர்த்தகர்கள் ஆகியோருக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதை உபயோ கிப்பதால் நிதி பரிவர்த்தனை, சட்ட ரீதியான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அவற்றை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் கள் குறித்தும் ஆராயப்பட்டு இத் தகைய மெய்நிகர் கரன்சி உபயோ கத்துக்கு அங்கீகாரம் அளிக்கப் படவில்லை என்று அவர் கூறினார்.
இது போன்ற மெய்நிகர் கரன் சியை (பிட் காயின்) உபயோகிப் போர், முறையற்ற பரிவர்த்தனை, சட்ட விரோத பரிவர்த்தனை உள்ளிட்டவற்றுக்கு வழி வகுக்கின் றனர். இதைப் பயன்படுத்துவதன் மூலம் நிதி மோசடி சட்டத்துக்கு உள்ளாகின்றனர். இத்தகைய மெய்நிகர் கரன்சி உபயோகம் நிதி செயல்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோடு, சட்ட விதிகளை மீறுவதாக அமையும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
பிட்காயின் போன்ற மெய்நிகர் கரன்சி உபயோகத்துக்கு ரிசர்வ் வங்கியோ அல்லது நிதிக் குழுவோ ஒரு போதும் அங்கீகாரம் அளிக்க வில்லை என்று தெளிவுபடுத்தினார்.
இத்தகைய பிட் காயின் உபயோகத்துக்கு எவ்விதமான கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியோ, பதிவு செய்திருப்பதோ அல்லது அங்கீகாரம் பெறவோ இல்லை. இதில் ஈடுபட்டிருப்போரோ அல்லது நிறுவனங்களோ இதற்கான பதிவு எதையும் பெறவில்லை என்று குறிப்பிட்டார்.
அர்ஜுன் ராம் மேகவால்
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஏற்கெனவே எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இத்தகைய மெய்நிகர் கரன்சிக்கு அங்கீகாரம் கிடையாது. இத்தகைய பரிவர்த்தனையில் ஈடுபடுவோரே அதில் ஏற்படும் சாதக, பாதக அம்சங்களுக்கு பொறுப்பு என்று அதில் குறிப்பிட்டுள்ளதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
செபி கண்காணிப்பு
பரஸ்பர நிதித்திட்டங்கள் (மியூச்சுவல் ஃபண்ட்) சிலவற்றின் நிகர சொத்து மதிப்பு (என்ஏவி) ஒரே நாளில் 10 சதவீத அளவுக்கு சரிந்தது தொடர்பாக பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) தீவிரமாக கண்காணித்து வருவதாக மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் மேகவால் தெரிவித்தார்.
டாரஸ் பரஸ்பர நிதியின் என்ஏவி கடந்த பிப்ரவரி மாதம் ஒரே நாளில் 10 சதவீத அளவுக்கு சரிந்தது. இதுகுறித்து புகார்கள் ஏதும் பதிவாகவில்லை. இருப்பினும் அசாதாரண நிகழ்வாக இதைக் கருதி செபி-யே தானாக முன்வந்து இந்த பிரச்சினை குறித்து விசாரித்து வருகிறது. இதில் விதி மீறல் இருந்தால் நிச்சயம் செபி நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.