

ஜப்பானைச் சேர்ந்த முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங் களான டொயோடா, சுஸூகி நிறுவனங்கள் சூழலை பாதிக்காத கார் தயாரிப்பதற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன, இந்த நிலையில் நேற்று இரு நிறுவனங்களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச் சூழல் பாதுகாப்பான கார்கள் மற்றும் வாகனங்களில் கூடுதல் பாது காப்பு தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதற்காக ஒப்பந் தம் மேற்கொண்டுள்ளதாக கூறப் பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு இரண்டு நிறுவனங்களின் இயக் குநர் குழுவும் ஒப்புதல் அளித் துள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தகவல் தொழில்நுட்பங்களில் கூட்டாக இணைந்து செயல்படவும், உதிரிபாகங்களை நிறுவனங்களுக்குள் பகிர்ந்து கொள்ளவும் முடியும். இதன் அடுத்த கட்டமாக இரண்டு நிறுவனங்களும் இணைந்து திட்டங்களை மேற்கொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
சுஸூகி நிறுவனம் ஹைபிரிட் கார் வகைகளோ அல்லது எலெக்ட்ரிக் கார், பேட்டரி கார்களையோ அதன் ஆலைகளில் தயாரிப்பதில்லை. டிரைவர் இல்லாத கார்களுக்கான தொழில்நுட்பத்தில் அந்த நிறுவனம் ஈடுபடவில்லை ஆனால் ஆட்டோமொபைல் துறை இவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.
இது தொடர்பாக பேசிய டொயோடா நிறுவனத்தின் தலைவர் அகியோ, இந்த ஒப்பந்தத்தின் மூலம் டொயோடா எதிர்காலத்தில் நிறைய கற்றுக் கொள்ளும். எங்களது சவால்களும், திறமைகளும் மேலும் அதிகரித்துள்ளன என்று குறிப்பிட்டார்.
இந்த தொழில்நுட்பங்களுக்கு அதிக செலவு செய்ய வேண்டும். இந்த செலவுகளைக் குறைப்பதற்காக கூட்டு சேர்ந் துள்ளதாகவும். இதில் பிறரும் இணையலாம் என இரண்டு நிறுவனங்களும் எதிர்பார்க் கின்றன.
சுஸூகி நிறுவனத்தின் தலைவர் ஒசாமா சுஸூகி குறிப்பிடுகையில், கூட்டுறவு அடிப்படையில் மேற் கொள்வதற்கான முதற்கட்டத்தை தொடங்கியுள்ளோம். திட்டமிட்ட இலக்கை எட்டுவோம் என்றார்.