

பிஎஸ் III ரக வாகனங்களை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விற் பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆட்டோமொபைல் நிறுவனங்களை விடவும், குடிமக் களின் ஆரோக்கியம் முக்கியமான தாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு வரை வாகனங் களை விற்க முடியும். 31-ம் தேதிக்கு முன்பு விற்கப்பட்ட வாகனங்களை ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகும் பதிவு செய்ய முடியும் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிபதிகள் மதன் பி லோகுர் மற்றம் தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. (ஏப்ரல் 1 முதல் பிஎஸ் IV அமல்படுத்துவதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச் சினைகள் குறித்த விரிவான கட்டுரை மார்ச் 23-ம் தேதி வணிகவீதி இணைப்பிதழில் வெளியாகியிருந் தது குறிப்பிடத்தக்கது.)
ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிஎஸ் III ரக வாகனங்கள் விற்க தடைவிதிக்கப்பட்டிருப்பதால் 8.24 லட்சம் வாகனங்களை விற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நிறுவனங்களின் வணிக நோக்கத் துக்காக, குடிமக்களின் ஆரோக் கியத்தை விட்டுகொடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிஎஸ் III ரக வாகனங்களை உற்பத்தி செய்யக்கூடாது ஆனால் விற் பனைக்கு தடையில்லை என்னும் ஆட்டோமொபைல் நிறுவனங் களின் கோரிக்கையை மத்திய அரசு முன்வைத்தது. ஆனால் அந்த வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு குறித்து ஏற்கெனவே தெரியும். ஆனால் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் கவனம் செலுத்தாமல் மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது என நீதிமன்றம் கூறியிருக்கிறது.
தற்போது பிஎஸ் III தகுதி சான் றுடன் 16,000 கார்கள், 96,720 லாரி கள், 40,000 மூன்று சக்கர வாகனங் கள், மற்றும் 6.71 லட்சம் இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. இந்த வாகனங்களின் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்த நஷ்டம் ரூ.20,000 கோடி முதல் ரூ.30,000 கோடி வரை இருக்கும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதிலும் 20,000 டீலர்கள் வசம் இந்த பழைய வாகனங்கள் இருக்கின்றன. இந்த தடையால் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துக்கு மட்டும் ரூ. 1,600 கோடி இழப்பு ஏற்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பிஎஸ் III -ல் இருந்து பிஎஸ் IV-க்கு மாறுவதன் மூலம் 80 சதவீத மாசுபாடு குறையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோமொபைல் துறையிலே இருவேறு கருத்துகள் இருக் கின்றன். வரும் 2020-ம் ஆண்டில் பிஎஸ் VI என்னும் தகுதி நிலைக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
ஆட்டோ பங்குகள் சரிவு
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சில ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்குகள் நேற்று கடுமையாக சரிந்தன. ஹீரோ மோட்டோ கார்ப், டிவிஎஸ் மோட்டார்ஸ், அசோக் லேலாண்ட் உள்ளிட்ட சில பங்குகள் சரிவை சந்தித் தன. ஹீரோமோட்டோ கார்ப் பங்கு 3% சரிந்தது. டிவிஎஸ் மோட்டார் 0.40%, அசோக் லேலண்ட் 2.83%, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்கு 0.50%, டாடா மோட்டார்ஸ் பங்கு 0.71% சரிந்து முடிந்தன.