Last Updated : 20 Jun, 2015 10:16 AM

 

Published : 20 Jun 2015 10:16 AM
Last Updated : 20 Jun 2015 10:16 AM

பங்குச் சந்தை தொடர்ந்து 6-வது நாளாக ஏற்றம்: நிப்டி 8200 புள்ளிகளுக்கு மேல் உயர்வு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 6 வது நாளாக ஏற்றமான வர்த்தகத்தை கண்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு பிறகு, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு லாப கரமான வாரமாக இந்த வாரம் அமைந்துள்ளது.

நேற்றைய வர்த் தகத்தில் மும்பை பங்குச் சந்தை யின் குறியீடான சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்து 27316 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசியப் பங்குச் சந்தையின் குறி யீடான நிப்டி 8200 புள்ளிகளுக்கு மேலே உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 8224 புள்ளிகளில் முடிந்துள்ளது.

வங்கி மற்றும் எண்ணெய் நிறு வனப் பங்குகள் இந்த ஏற்றத்தில் ஆதாயம் அடைந்துள்ளன ஆட்டோ மொபைல் துறையில் சில பங்கு களும் ஏற்றத்தைக் கண்டது. தென் மேற்கு பருவமழை தொடங்கி யுள்ளதும், சர்வதேச அளவில் சந்தைகளின் ஏற்றமான வர்த்தகச் சூழலும் முதலீட்டாளர்களை சாதகமான வர்த்தக மனநிலைக்கு மாற்றியுள்ளது என சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில் ஏற்றமான வர்த்தகப் போக்கு நிலவுகிறது. அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டுள்ளது. மேலும் கிரீஸ் நாட்டின் இக்கட்டான பொருளாதார நிலைமையும் வர்த்தக சூழ்நிலையை சாதகமாக மாற்றியுள்ளது.

பருவமழை குறித்த கணிப்பு களும் சந்தை ஏற்றத்துக்கு காரண மாக அமைந்துள்ளது. மும்பை மாநகரத்தில் 30 மணி நேரத்தில் 283 மிமீ மழை பெய்துள்ளது. ஜூன் மாதத்தில் இதுவரை 537 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் மாத மழை அளவின் சராசரி 523 மிமீ-யாக இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

முக்கிய நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டுவந்ததும் சந்தை உயர்வுக்கு காரணமாகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த வாரத்தில் மட்டும் 12 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.நேற்றைய வர்த்த முடிவில் இதன் பங்குகள் 1.8 சதவீத ஏற்றம் கண்டது.

சன் டிவி நெட்வொர்க் பங்குகள் 7.88 சதவீதம் ஏற்றத்தைக் கண்டது. சன் நெட்வொர்க் நிறுவனங்களின் லைசன்ஸ் குறித்த விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறிய கருத்தால் வர்த்தகத்தின் இடையில் இதன் பங்குகள் விலை ஏறத் தொடங்கி யது. நேற்றைய வர்த்தகத்தில் மட்டும் ரூ.24.40 என்கிற அளவுக்கு ஏற்றம் கண்டது.

எண்ணெய் மற்றும் எரிவாயு துறை, வங்கித் துறை மற்றும் எப்எம்சிஜி துறை பங்குகள் ஏற்றத்தைக் கண்டன. ரியாலிட்டி, கன்ஸ்யூமர் டியூரபிள், மற்றும் மின்சார துறை பங்குகள் இறக்கத்தைக் கண்டன.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 0.6 சதவீதமும், ஸ்மால் கேப் 0.3 சதவீதமும் ஏற்றம் கண்டது. நேற்றைய வர்த்தகத்தில் 1432 பங்குகள் லாபத்தையும், 1234 பங்குகள் நஷ்டத்தையும் சந்தித்துள்ளன.

நேற்றைய வர்த்தகத்தில் ஏற்றம் கண்ட முக்கிய பங்குகள் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 4.11%, பேங்க் ஆப் பரோடா 4.49%, ஓஎன்ஜிசி 2.01%, அம்புஜா சிமெண்ட்ஸ் 2%, மாருதி சுஸூகி 1.97%. இறக்கத்தைச் சந்தித்த பங்குகள் டாடா மோட்டார்ஸ் 2.78%, ஜீ எண்டர்டெயின்மெண்ட் 1.99%, பவர் கிரைட் கார்ப்பரேஷன் 1.37%, சன் பார்மா 1.18%, டாடா பவர் 1.09%.

ஜனவரி 23 தேதி முடிந்த வாரத்துக்குப் பிறகு சந்தை ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மூன்று வார சரிவை இந்த ஏற்றத்தின் மூலம் ஈடுசெய்துள்ளதாக சந்தை முகவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x