

மாருதி சுசூகி பங்கு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சந்தை மதிப்பு அடிப்படையில் எட்டாவது இடத்துக்கு அந்த பங்கு முன்னேறி இருக்கிறது. இன்ஃபோசிஸ், ஓ.என்.ஜி.சி ஆகிய பங்குகள் 9 மற்றும் 10-வது இடத்தில் இருக்கின்றன.
நேற்றைய வர்த்தகத்தில் மாருதி பங்கு 3 சதவீதம் உயர்ந்து 7,451 ரூபாயில் முடிவடைந்தது 52 வார உச்சபட்ச விலையை தொட்டது. இதன் காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6,562 கோடி உயர்ந்து ரூ.2,25,079 கோடியாக இருக்கிறது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2,17,899 கோடியாகவும், ஓஎன்ஜிசி சந்தை மதிப்பு ரூ.2,17,074 கோடியாகவும் இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் (ரூ.1,34,896 கோடி) மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ( ரூ.1,34,896 கோடி) ஆகிய இரு நிறுவனங்களின் சந்தை மதிப்பை விட மாருதியின் சந்தை மதிப்பு அதிகமாக இருக்கிறது.