

ராண்ட்ஸ்டாண்ட் இந்தியா நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. மே மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.
இதற்கு முன்பு நிறுவனத்தின் செயல்பாட்டு அதிகரியாக பொறுப்பில் இருந்தார். 2014ம் ஆண்டு ஜூலை முதல் 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ராண்ட்ஸ்டாண்ட் ஜப்பான் நிறு வனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
ஹோப் இண்டர்நேஷ்னல் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர்.
வின்சர் பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றவர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சிமோன் ஃப்ராசர் (Fraser) பல்கலைக் கழகத்தில் மேலாண்மை உயர் கல்வி முடித்தவர்.
ஜப்பானில் உள்ள அமெரிக்க வர்த்தக சபையின் சுற்றுலா குழு துணைத் தலைவராக இருந்தவர்.
சர்வதேச அளவிலான நிர்வாகம், உத்திகள் வகுப்பது, செயல்பாடுகளுக்காக, மேலாண்மை கல்வி பயிற்சியான இன்சியாட் (INSEAD) பயிற்சி பெற்றவர்