

எஸ்ஸார் ஆயில் கார்ப்பரேஷன் நிறு வனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2014-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை ஹிந்துஸ்தான் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
இதே நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரி, இயக்குநர் உள்ளிட்ட பல பொறுப்புகளிலும் இருந்தவர்.
டேனிஷ் டெவலப்மெண்ட் பைனான்ஷியல் நிறுவனத்தில் முதலீட்டு மேலாளர் மற்றும் ஹெச்ஓஇசி பர்தால் இந்தியா நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். இங்கிலாந்தில் உள்ள ஸ்டேர்த்கிளைட் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையியலில் உயர்கல்வியும் முடித்தவர்.