

மெய்நிகர் பணம் எனப்படும் விர்ச்சுவல் கரன்சியான பிட் காயினை இந்தியாவில் அங்கீகரிப்பது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதை புழக்கத்தில் விடுவதில் உள்ள பாதக அம்சங்கள் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக பலரும் பல்வேறு தரப்பு கருத்துகளை தெரிவித்தனர். இருப்பினும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிட்காயின் உபயோகம் சட்ட விரோதமானது என்று கடந்த மார்ச் மாதம் மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேகவால் தெரிவித்திருந்தார். இதை உபயோகிப்பவர்கள் மீது நிதி மோசடி சட்டம் பாயும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிட்காயின் உபயோகம் குறித்து ஏற்கெனவே ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா, உள்துறைச் செயலர் ராஜீவ் மெகரிஷி, பொருளாதார விவகாரத்துறைச் செயலர் தபன் ராய், நிதிச் சேவைகள் துறைச் செயலர் அஞ்சலி சிப் துகல் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கடந்த மாதம் பிட் காயின் புழக்கம் குறித்து பொதுமக்களிடம் மத்திய அரசு கருத்துகளை கேட்டிருந்தது. கடந்த மார்ச் மாதம் நிதி அமைச்சகம் துறை சார் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை அமைத்து, இந்தியாவில் இத்தகைய மெய்நிகர் கரன்சி உபயோகம் மற்றும் சர்வதேச நாடுகளில் இவற்றின் புழக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு கேட்டிருந்தது.
சமீபத்தில் உலகின் பெரும் பாலான கம்ப்யூட்டர்களை முடக் கிய ரேன்சம்வேர் வைரஸ்களை பரப்பிய ஹேக்கர்கள் இதைத் தடுக்க வேண்டுமானால் இது போன்ற பிட்காயின் போன்ற மெய்நிகர் கரன்சியைத்தான் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பிட் காயின் மீது மத்திய அரசின் கவனம் திரும்பியுள்ளது.
பிட்காயின் பரிமாற்ற செய லியை செயல்படுத்தும் ஜீபே எக்ஸ்சேஞ்ச் தங்களின் செயலி நாளொன்றுக்கு 5 லட்சம் தடவை கள் பதிவிறக்கம செய்யப் படுவதாக தெரிவித்தது. தினசரி 2,500 பேர் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தது.
-பிடிஐ