ஜிஎஸ்டி: மோடி ஆலோசனை

ஜிஎஸ்டி: மோடி ஆலோசனை
Updated on
1 min read

ஜிஎஸ்டியை வரும் ஜூலை 1 ம் தேதி அமல்படுத்துவதற்கு ஏற்ப பிரமதர் மோடி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, வருவாய்த் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா மற்றும் மத்திய உற்பத்தி வரித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஜிஎஸ்டி குழு வரி விகிதங்களை முடிவு செய்த பிறகு பிரதமர் மோடி கலந்து கொள்ளும் முதல் கலந்தாய்வு கூட்டம் இது வாகும்.

நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி குழு கிட்டத்தட்ட அனைத்து பொருட் களுக்குமான வரி விகிதங்களை இறுதி செய்துள்ளது. மீண்டும் இந்த குழுவின் கூட்டம் ஜூன் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்கள் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம், தீட்டப்படாத வைரம் உள்ளிட்ட சில பொருட்களுக்கு சிறப்பு பிரிவின் கீழ் வரி விதிக்கப்பட்டுள்ளது. உப்பு, முட்டை, தயிர், காய்கறிகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in