Published : 11 May 2017 10:24 AM
Last Updated : 11 May 2017 10:24 AM

ஏப்ரல் மாதத்தில் கட்டுமானத்துறையில் அதிக வேலைவாய்ப்பு: ஆய்வில் தகவல்

கடந்த ஏப்ரல் மாதத்தில் கட்டுமானத் துறையும் ரியல் எஸ்டேட் துறையும் அதிக வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளதாக டைம்ஸ்ஜாப்ஸ் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் மலிவு வீடு கள் வழங்கும் திட்டத்தால் இந்த துறைகளில் திறன்மிக்க ஊழியர் களின் தேவை அதிகரித்துள்ளதாக டைம்ஸ்ஜாப்ஸ் அறிக்கை கூறியுள் ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக திறன் மிகு ஊழியர்களின் தேவை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. கட்டுமானத்துறையில் திறன்மிகு ஊழியர்களின் தேவை 7 சதவீதமும் ரியல் எஸ்டேட் துறையில் திறன் மிகு ஊழியர்களின் தேவை 6 சதவீதமும் உயர்ந்துள்ளது.

``இந்தியாவில் நடுத்தர மக்களின் வளர்ச்சி மற்றும் வாங்கும் திறன் அதிகரிப்பது போன்றவற்றையே எங்களது ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. நடுத்தர மக்களின் வீடு வாங்கும் கனவு தற்போது நிறைவேறி வருகிறது. மலிவு வீடுகளை மக்களுக்கு வழங்குவதற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிவருவதால் தற்போது தேவை அதிகரித்துள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் துறை மற்றும் கட்டுமானத்துறை வளர்ச்சி யடைந்துவருகிறது. கூடுதலான வேலைவாய்ப்புகளும் உருவாகி யுள்ளது. இதனால் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிக்கு எடுத்து வருகின்றனர்’’ என்று டைம்ஸ்ஜாப்ஸ் நிறுவனத்தின் தொழில் தலைவர் ராமாத்ரயா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

2017-ம் ஆண்டில் ஏப்ரல் மாதத் தில் மற்ற துறைகளை விட கட்டு மானத்துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறை அதிக பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. தொழில் மேலாளர்கள், கன்சல் டண்ட், லாஜிஸ்டிக்ஸ் ஊழியர் களுக்கு அதிக தேவை உருவாகி யுள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. பெங்களூரு, புனே ஆகிய நகரங்களில் ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் அகமதாபாத் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் அதிக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஏற்கெனவே பணி அனுபவம் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் வழங்கப் படுவதாக டைம்ஸ்ஜாப்ஸ் அறிக்கை கூறுகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x