

இந்தியாவில் தேயிலை ஏற்று மதி ஒரு கோடி டன் கூடுதலாக உயர்ந்துள்ளதாக தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறு தேயிலை சங்கத்தினருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் உதகையில் யுஎஸ்எஸ்எஸ் அரங்கில் நடந்தது.
பயிற்சிக்கு தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் சி.பால்ராசு தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறு தேயிலை விவசாய சங்கங்களுக்கு தேயிலை வாரியம் மூலம் உபகரணங்கள் வாங்க ஹெக்டருக்கு ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மானியம் பெறுவது, தரமான தேயிலை பறிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் தேயிலைக்கு குறைந்தபட்ச சராசரி விலையை, கடந்த 5 மாதங்களாக வாரியம் நிர்ணயம் செய்து வருகிறது. குறைந் தபட்ச விலையாக ரூ.15 நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இந்த விலையை வழங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டுறவு தேயிலைத் தொழிற் சாலைகள் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் கிலோவுக்கு ரூ.2 கழித்து ரூ.13 வரை உறுப்பினர்களுக்கு வழங்குகின்றன.
மேட்டுப்பாளையத்தில் தனியார் பங்களிப்பில் ரூ.15 கோடியில் 11 ஏக்கரில் தேயிலை பூங்கா உருவாக் கப்பட்டு வருகிறது. இதற்கு தேயிலை வாரியம் 50 சதவீத மானி யம் அளித்துள்ளது. இந்த பூங்கா வில் ஒருங்கிணைந்த தேயிலை கிடங்குகள் அமைக்கப்படும். எளி தான போக்குவரத்து, காலநிலை கருதி மேட்டுப்பாளையத்தில் கிடங் குகள் அமைக்கப்படுகின்றன.
உணவு பாதுகாப்புத் தர நிர்ணயச் சட்டத்தின் தரத்தில் இல்லாத தேயிலைத் தூள் அழிக்கப் படுகிறது. இதன் பேரில் 40 டன் தேயிலைத் தூள் அழிக்கப்பட்டுள் ளது. இதை உற்பத்தி செய்த கோத்த கிரியைச் சேர்ந்த 4 தொழிற்சாலை கள் சீல் வைக்கப்பட்டன. கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகளின் தரமில்லாத 10 டன் தேயிலைத் தூள் அழிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து எகிப்து, ஈரான் மற்றும் ரஷ்யாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்படு கிறது. கென்யாவில் வறட்சி காரண மாக மகசூல் குறைந்ததால் இந்தியா வுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒரு கோடி டன் தேயிலை தூள் ஏற்றுமதி கூடுதலாக அதிகரித்துள்ளது என்றார்.