சென்செக்ஸ் 589 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 589 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை பங்குச்சந்தையில் இன்று பிற்பகல் 1 மணியளவில், சென்செக்ஸ் 589 புள்ளிகள் உயர்ந்து, 20,551 ஆக இருந்தது.

இதனிடையே, தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 183 புள்ளிகள் உயர்ந்து, 6,083 ஆக காணப்பட்டது.

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற நிலை காணப்பட்டிருந்தது.

அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்ததும், சர்வதேச சந்தைகளில் நிலவும் சாதகச் சூழ்நிலைகளுமே இந்த ஏற்றத்துக்குக் காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in