Published : 05 Apr 2017 03:46 PM
Last Updated : 05 Apr 2017 03:46 PM

சிலிக்கான் பள்ளத்தாக்கில் தமிழர்களுக்கான தொழில் முனைவோர் சந்திப்பு

அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கம், முதல் முறையாக தமிழர்களுக்கான தொழில் முனைவோர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளது. மே 4ஆம் தேதி இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இளைஞர்கள், பெண்கள், வளர்ந்து வரும் தொழிமுனைவோர் என அமெரிக்க தமிழ் சமூகத்தில் இருப்பவர்களை உலகின் மற்ற இடங்களில் இருக்கும் இந்திய மற்றும் சர்வதேச தொழில் முனைவோருடன் இணைப்பதே அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கத்தின் நோக்கமாகும்.

லாப நோக்கமற்ற இந்த சங்கம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் இருக்கும் அடுத்த தலைமுறை தொழில்முனைவோரை உற்சாகப்படுத்தவும், ஊக்குவிக்கவும் பல நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. அதன் ஒரு அங்கமாக தமிழர்களுக்கான தொழில் முனைவோர் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில் உலகளவில் சுய தொழில் செய்து வெற்றி பெற்ற தமிழர்கள், முதலீட்ட்டாளர்கள், துறையில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள், புதிய சிந்தனைகளை முன்னெடுப்பவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் இந்த சந்திப்பில், வெற்றிபெற்ற தொழில்முனைவோரின் உரைகள், கலந்துரையாடல்கள், தொழில் வழிகாட்டிகளுடன் அறிமுகம் செய்துகொள்ளும் வாய்ப்பு என பல நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. எல்லை கடந்த தொழில் முன்னெடுப்புகள் குறித்து தமிழகத்தை சேர்ந்த தொழில் முனைவோர் பேசவுள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு: http://www.ateausa.org, www.ateausa.org/gtensprin

தொடர்புக்கு - நரசிம்மன் கஸ்தூரி 650 793 0056

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x