பேடிஎம் வாலெட்டுக்கு 20 கோடி வாடிக்கையாளர்கள்

பேடிஎம் வாலெட்டுக்கு 20 கோடி வாடிக்கையாளர்கள்
Updated on
1 min read

பணப் பரிமாற்ற செயலியான பேடிஎம் வாலெட்டை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை 20 கோடியை தொட்டுள்ளது என்று அந்த நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. வாலெட் அறிமுக மான 3 ஆண்டுகளில் அதிக பய னாளிகளை சென்றடைந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய அந்த நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் தீபக் அபாட், வாடிக்கை யாளர்கள் மற்றும் வர்த்தகர் களுக்கு இடையேயான மின்னணு பரிவர்த்தனையை கூடுதல் கட்ட ணங்கள் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. தற்போதுவரை 20 கோடி உறுப்பினர்கள் பதிவு செய்துள் ளனர். அவர்களின் 5 லட்சம் பேர் தினசரி பயன்படுத்துகின்றனர் என்றும் கூறினார்.

பேடிஎம் வாலெட்டில் புதிதாக பல டூல்ஸ்கள், பார்க்கிங், கேண்டீன், மருத்துவ சேவைகள் தொடர்பானவற்றையும் இணைத் துள்ளோம். 24 மணி நேர வர்த்தகர் கள் சேவை மையத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் மின்னணு பரிவர்த்தனை யில், பேடிஎம் வாலெட் சேவையை பயன்படுத்தும் வர்த்தகர்களுக் கும், வாடிக்கையாளர்களுக்கும் உதவ முடியும் என்றும் கூறினார்.

பேடிஎம் மால்

இதற்கிடையே பேடிஎம் மால் என்கிற செயலியையும் பேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்துள் ளது. இதில் தகுதி வாய்ந்த விற்பனையாளர்கள் மட்டும் வர்த் தகம் செய்ய தேர்ந்தெடுக்கப்படு வார்கள். நிறுவனத்தின் மீதுள்ள நன்மதிப்பை காக்கும் விதமாக, பேடிஎம் மாலில் உள்ள அனைத்து பொருட்களும் பேடிம் சான்றளித்த கிடங்குகள் மற்றும் பேடிஎம் அனுமதித்த பார்சல் சர்வீஸ் வழி அனுப்பி வைக்கப்படும்.

தகுதியான விற்பனையாளர் கள், எங்களது கட்டுப்பாட்டில் உள்ள கிடங்குகள் மற்றும் பார்சல் நிறுவனங்கள் மூலம் பேடிஎம் மால் இயங்கும் என்று நிறுவனத்தின் துணைத் தலைவர் சவுரப் வஷிஷ்தா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in