

65 பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பெண் இயக்குநர்களே இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிறுவனங்கள் பதிவு துறைக்கு மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும் பட்டியலிடப்பட்ட 1,355 தனியார் நிறுவனங்களிலும் பெண் இயக்குநர்கள் இல்லை என்றும் நிறுவனங்கள் பதிவு துறைக்கு கூறியுள்ளது.
நிறுவனங்களில் இயக்குநர்கள் குழுவில் பாலின பாகுபாட்டை குறைக்கும் விதமாக, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் 2015 ஏப்ரல் 1 தேதிக்கு பிறகு குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராவது நியமிக்க வேண்டும் என செபி வலியுறுத்தி இருந்தது.
ஆனால் மொத்தம் 1,355 பட்டியல் நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் இல்லை. 292 பட்டியலிடாத நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் இல்லை என்று நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால் எழுத்து மூலமாக மக்களவையில் தெரிவித்தார்.