வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது: இன்று ரகுராம் ராஜனின் கடைசி நிதிக் கொள்கை அறிவிப்பு

வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது: இன்று ரகுராம் ராஜனின் கடைசி நிதிக் கொள்கை அறிவிப்பு
Updated on
1 min read

நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் இன்று நடைபெறுகிறது. ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பர் 04 ஆம் தேதியுடன் முடிவடைவதால், அவர் கலந்து கொள்ளும் கடைசி நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் பல அறிவிப்புகள் இருக்கலாம் என்றாலும் வட்டி குறைப்பு குறித்த அறிவிப்பு இருக்காது என்றும், சில்லரை பணவீக்க விகிதம் 2017 ஆம் ஆண்டுக்குள் 5 சதவீதமாக கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சில்லரை பணவீக்கம்

சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி ஆண்டுக்காண்டு நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான சில்லரை பணவீக்க விகிதம் அதிகரித்து வருகிறது. ஜூன் 2016 புள்ளிவிவரங்கள்படி அதிகபட்சமாக 5.77 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜூன் 2015ல் இது 5.4 சதவீதமாக இருந்தது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில் நுகர்வோர் விலை குறியீடு விவரங்கள் முக்கியமாக விவாதிக்கப்படும். சமீபத்தில் ராஜன் குறிப்பிடும்போது பணவீக் கத்துக்கு எதிராக ரிசர்வ் வங்கி எப்போதும் நெருக்குதல் கொடுக்கும் என்று குறிப்பிட்டுள் ளார் மேலும் பணவீக்கமின்மை நடவடிக்கைகளின் முக்கிய கூறாக தற்போதைய மதிப்பீடு தேவை உள்ளது. ஜனவரி 2015க்கு பிறகு வட்டி விகிதங்களில் 150 அடிப்படை புள்ளிகளை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது என்றும் கூறியிருந்தார்.

ராஜன் கலந்து கொள்ளும் கடைசி நிதிக் கொள்கை கூட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தொழில்துறையினர், ரெபோ ரேட் வட்டி விகிதத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது, 6.5 சதவீதமாக நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் ரிவர்ஸ் ரெபோ விகிதம் 6 சதவீதமாகவும், சிஆர்ஆர் விகிதம் 4 சதவீதமாகவுமே நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் சர்வதேச பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக் கான சில நெகிழ்வான சமிக்கை கள் இருக்கலாம் என எதிர்பார்ப் பதாகவும் தொழில்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரகுராம் ராஜன் 2013 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் 23 வது கவர்னராக பொறுப்பேற்றார். அந்த சமயத்தில் ரூபாய் மதிப்பின் தொடர்ச்சியான வீழ்ச்சி, அதிக பணவீக்க விகிதம் மற்றும் பொருளாதார வளர்ச்சியும் தேக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் வங்கி தொடங்க அனுமதி அளிக்கும் அறிவிப்பை சமீபத்தில் ராஜன் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது பங்குச் சந்தையில் உற்சாகத்தை கொடுத்துள்ளதாகவும் தொழில் துறையினர் குறிப்பிட்டுள்ள னர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in