

நடப்பாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.9 சதவீதமாக இருக் கும் என கோல்ட்மேன் சாக்ஸ் கணித்திருக்கிறது. பருவமழை, ஏழாவது சம்பள கமிஷன், சீர்திருத் தங்கள், அந்நிய நேரடி முதலீடு உயர்வு ஆகிய காரணங்களால் 7.9% வளர்ச்சி இருக்கக் கூடும் என கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித் திருக்கிறது. 7.5% வளர்ச்சி என்பதே பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் வல்லுநர்களின் கருத்தாக இருக்கும் பட்சத்தில் கோல்ட்மேன் சாக்ஸ் 7.9 சதவீதமாக கணித் திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோல்ட்மேன் சாக்ஸ் மேலும் கூறியிருப்பதாவது: வளர்ச்சி படிப் படியாக இருக்கும், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8 சதவீதமாக வளர்ச்சி இருந்தாலும் ஒட்டு மொத்த நிதி ஆண்டில் 7.9 சதவீதமாக இருக்கும். மேலே குறிப்பிட்ட கார ணங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருந்தாலும் சில பாதகங்களும் உள்ளன. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை எதிர்பார்த் ததை விட உயர்த்தி வருகிறது. சீனாவின் மந்த நிலையும் கவலைக் குரியதாக உள்ளது. உள்நாட்டில் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. தவிர சில துறையில் நிறுவனங்கள் வாங்கியுள்ள கடனும் வளர்ச்சியை பாதிக்கலாம்.
கடந்த சில மாதங்களாக முக்கிய மான கொள்கைகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளன. சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் இரு அவை களிலும் நிறைவேறியுள்ளது. தவிர பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது உள்ளிட்ட நடவடிக்கை எதிர்காலத்துக்கு சாதகமானவை.
கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு பருவமழை உள்ளது. இது வளர்ச்சிக்கு சாதக மாக இருக்கும். தவிர சர்வதேச அளவில் பிரெக்ஸிட் (ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது) உள்ளிட்ட பல விஷயங்கள் நடந்த போதிலும் ரூபாயின் மதிப்பு நிலையாக இருப் பது முதலீட்டாளர்களிடையே நம் பிக்கை ஏற்படுத்துவதாக இருக் கிறது.
ஜிஎஸ்டி, திவால் சட்டம் உள் ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப் படும் பட்சத்தில் தொழில்புரிவதற்கு எளிதான சூழல் நிலவும், இதன் மூலம் கட்டுமானத்துறையில் முதலீடுகள் உயரும். பாதுகாப்பு, சில்லரை வர்த்தகம், விமான போக்குவரத்து உள்ளிட்ட துறையில் அந்நிய நேரடி முதலீடு உயரும் வாய்ப்பு இருக்கிறது.
சீர்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்துவது, கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்துவது போன்றவற்றை செயல்படுத்தும் போது, நீண்ட கால வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும் என்றும் கோல்ட்மேன் சாக்ஸ் கருத்து தெரிவித்துள்ளது.
ராஜனை தொடருவார் படேல்
ரகுராம் ராஜனின் பதவி காலம் வரும் செப்டம்பர் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய கவர்னராக உர்ஜித் படேல் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் ராஜன் வழியை பின் தொடருவார் என கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்திருக்கிறது. வட்டி விகிதம் தற்போதைய நிலையிலேயே இருக்கும். இந்த ஆண்டில் வட்டி குறைய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.
வட்டி விகிதம் மட்டுமல்லாமல் பணவீக்க இலக்கு, வங்கித்துறை சீர்திருத்தம், ஒட்டுமொத்த பணப் புழக்கம், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் ராஜன் வழியை படேலும் பின்பற்றுவார் என்றும் கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்திருக்கிறது.