

உபெர் நிறுவனத்தின் தலைமை பிசினஸ் அதிகாரியாக சமீபத் தில் பொறுப்பேற்றுள்ளார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல் கவுன்சில் உறுப்பினராக இருந்தவர். மிஸ்திரி வெளி யேற்றத்துக்கு பிறகு அந்த நிறு வனத்திலிருந்து விலகினார்.
இளம் வயதில் மும்பை பங்குச் சந்தைக்கு தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்புக்கு வந்தவர்.
நியூயார்க் பங்குச் சந்தை மற்றும் மெரில் லின்ச் (Merrill Lynch) நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்தவர்.
டாடா ஏஐஜி ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் தினசரி அலுவல்கள் இல்லாத இயக்குநராக பொறுப்பு வகித்துள்ளார்.
யுனைடெட் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், கொல்கத்தா ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் அசோசியேஷன் உள்ளிட்டவற்றில் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்.
ஜெனிவாவில் 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலக பொருளாதார மைய மாநாட்டில் இளவயது சர்வதேச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பிலானி தொழில்நுட்ப அறிவியல் கல்வி நிறுவனத்தில் பொறியியல் பட்டமும், பொருளாதாரத்தில் பட்டமும் பெற்றவர். அமெரிக்காவின் வாண்டெர்-பில்ட் பல்கலைக் கழகத்தில் மேலாண்மையியல் பட்டமும் பெற்றவர்.