கொசுவை விரட்டும் டிவி: எல்ஜி நிறுவனம் விற்பனை

கொசுவை விரட்டும் டிவி: எல்ஜி நிறுவனம் விற்பனை
Updated on
1 min read

உலக அளவில் மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனமான எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் உலகின் முதல் கொசுவை விரட்டும் டிவியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. தென் கொரியாவிலிருந்து செயல்படும் இந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, முதன் முறையாக கொசு விரட்டும் டிவி விற்பனையை இந்தியாவில் தொடங்க உள்ளதாக கூறியுள்ளது. இதன் மூல டெங்கு மலேரியா, ஸிகா போன்றவற்றை பரப்பும் கொசுக்கள் பரவாமல் தடுக்கப்படும்.

எல்ஜி நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொசுக்களை விரட்டும் தொழில்நுட்பத்திலான இந்த டிவி அல்ட்ரா சோனிக் அலைகளை வெளிப்படுத்தும். இந்த அல்ட்ரா சோனிக் ஒலிகள் மனிதர்களின் செவிக்கு கேட்காது. ஆனால் கொசுக்களை இது விரட்டும். இந்த தொழில் நுட்பத்தை, எல்ஜி நிறுவனத்தின் இதர தயாரிப்புகளான வாஷிங் மெஷின், ஏர் கண்டிஷன் போன்றவற்றிலும் பயன்படுத்த உள்ளது. சென்னையில் உள்ள தனி ஆய்வகம் ஒன்று இந்த தொழில்நுட்பத்துக்கு சான்றளித் துள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிவியை அணைத்த பிறகும் இந்த அல்ட்ரா சோனிக் அலைகள் வெளியாக கொசுவை விரட்டும் வகையில் இந்த டிவி வடிவமைக்கப்பட்டுள் ளது. தற்போது ரூ.26,500, மற்றும் ரூ.47,500 விலையில் இரண்டு மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

கொசுக்களால் பாதிக்கப்படும் சூழ்நிலைகளில் உள்ள குறைந்த வருவாய் பிரிவு நுகர்வோர்தான் இந்த டிவி விற்பனைக்கான இலக்கு. பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு அடுத்த மாதத்தில் இந்த டிவியை கொண்டு செல்ல உள்ளோம் என்றும் எல் ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் அதிகாரி கிம் சாங் யேல் தெரிவித்தார். மேலும் இதர நாடுகளுக்கு கொண்டு செல்வது குறித்து தற்போது எந்த திட்டங்களும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in