‘பார்ச்சூன் நெக்ஸ்ட் 500’ பட்டியலில் ஐஆர்சிடிசி

‘பார்ச்சூன் நெக்ஸ்ட் 500’ பட்டியலில் ஐஆர்சிடிசி
Updated on
1 min read

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ``பார்ச்சூன் நெக்ஸ்ட் 500’’ பட்டிய லில் ஐஆர்சிடிசி இடம்பெற்றுள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் பார்ச்சூன் பட்டியலிட்டுள்ள மதிப்புமிக்க அடுத்த 500 இந்திய நிறுவனங்களில் இடம் பிடித்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக ஐஆர்சிடிசி உள்ளது. 2015 -ம் ஆண்டு இந்தப்பட்டியலில் 328 வது இடத்தில் இருந்த ஐஆர்சிடிசி இந்த ஆண்டு 199-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த ஆண்டில் மிகச் சிறப் பாக பங்களிப்பு செய்துள்ள நிறு வனங்களை பாராட்டும் விதத்தில் இதற்கான விருது வழங்கப்படு கிறது. நேற்று நடைபெற்ற பார்ச்சூன் நெக்ஸ்ட் 500 நிறுவனங்கள் விருது அளிக்கப்பட்டுள்ளது. மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி சிறப்புரை யாற்றினார். ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ரகுபர் தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

ஐஆர்சிடிசி 2014-15 நிதியாண் டில் ரூ.1,141 கோடி ஒட்டுமொத்தமாக வர்த்தகம் செய்துள்ளது. 2015-16 நிதியாண்டில் ரூ.1,503 கோடிக்கு விற்றுமுதல் கண்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் மினிரத்னா நிறுவனமாக இருக்கும் ஐஆர்சிடிசி மின்னணு தகவல் தொடர்பை சிறப்பாக பயன்படுத்தியதற்காக ‘ஸ்கோப் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் எக்ஸலன்ஸ் அவார்ட் 2016’ என்கிற விருதையும் கடந்த மாதத்தில் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பார்ச்சூன் நெக்ஸ்ட் 500 நிறுவனங்கள் பட்டியலில் அதிகமாக நடுத்தர நிறுவனங்கள் சிறு நிறுவனங்களை பார்ச்சூன் பட்டியலிட்டுள்ளது. கடந்த ஆண்டில் சிறப்பாக செயல் பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பார்ச்சூன் பட்டிய லிட்டுள்ளது. குறிப்பாக விவசாய பொருட்கள், பார்மா, தொழில் நுட்பம், உருக்கு மற்றும் இரும்பு, நிதிச் சேவை துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களை இந்நிறுவனம் பட்டியலிடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in