

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக அர்விந்த் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இதை மத்திய அரசு வியாழக்கிழமை உறுதி செய்தது.
அமெரிக்க வாழ் இந்தியரான அர்விந்த் சுப்ரமணியம் மிகச் சிறந்த பொருளாதார நிபுணராவார். வாஷிங்டனில் உள்ள பீட்டர்சன் சர்வதேச பொருளாதார மையத்தில் பொருளாதார ஆய்வாளராக உள்ள இவர், ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனுடன் சர்வதேச செலாவணி நிதியத்தில் ஒன்றாக பணியாற்றியவர்.
பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படுத்துவது மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தான் முன்னுரிமை அளிக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.