மழைக்கால கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி நிறைவேறும்: நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வார் நம்பிக்கை

மழைக்கால கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி நிறைவேறும்: நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வார் நம்பிக்கை
Updated on
1 min read

நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வார் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக ஜவுளித்துறை இணையமைச்சராக இருந்த சந்தோஷ் கங்வார் நிதித்துறைக்கு மாற்றப்பட்டார். இவருடன் அர்ஜூன் ராம் மேக்வாலும் நிதித்துறை இணையமைச்சராக பொறுப்பேற் றுக்கொண்டார். இருவரும் பொறு பேற்பதற்கு முன்பு நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தனர்.

அருண் ஜேட்லி, நிதித்துறைச் செயலாளர் அசோக் லவாசா, பொருளாதார விவகாரங்களுக் கான செயலாளர் சக்தி காந்ததாஸ் உள்ளிட்ட நிதி அமைச்சக அதிகாரிகள் முன்பு இருவரும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

நிதித்துறை இணையமைச்சராக பொறுப்பேற்ற பிறகு செய்தி யாளர்களை சந்தோஷ் கங்வார் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு நாடாளுமன் றத்துக்கு வெளியே எந்த எதிர்ப் புக்குரலும் இல்லை. ஒட்டு மொத்த உலகமும் இந்தியா எப்படி செயல்படும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறது. நடப்பு மழைக் கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

காங்கிரஸ் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு எந்த ஒரு கட்சியும் ஜிஎஸ்டியை எதிர்க்கவில்லை. அனைத்து கட்சிகளும் இதற்கு (ஜிஎஸ்டி) ஆதரவாகவே இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் சில தடைகள் உள்ளன. மழைக்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி நிறைவேற அனைத்து கட்சிகளின் ஆதரவு இருக்கும் என்று சந்தோஷ் கங்வார் நம்பிக்கை தெரிவித்தார். மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்க இருக்கிறது.

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் (1999 முதல் 2004 வரை) அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1991-ம் ஆண்டு முதல் இப்போது வரை ( 2009 தவிர ) அனைத்து மக்களவை தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். முன்னதாக ஜவுளித்துறையில் இருந்தார்.

நிதித்துறையில் மற்றொரு இணையமைச்சரான அர்ஜூன்ராம் மேக்வால் பிலிப்பின்ஸ் பல்கலைக் கழகத்தில் எம்பிஏ படித்தவர். ஐஏஎஸ் அதிகாரியான இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிகானீர் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஜிஎஸ்டி வரி அளவை சட்டமாக் குவது என்ற காங்கிரஸின் கோரிக்கையை ஏற்க முடியாது. உலகில் எங்கேயும் அப்படி இல்லை. காங்கிரஸுடன் பாஜக தொடர்ந்து விவாதித்து வருகிறது. மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று நிதித்துறை இணை யமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in