பெட்ரோல் விலை 41 காசுகள் உயர்வு

பெட்ரோல் விலை 41 காசுகள் உயர்வு
Updated on
1 min read

பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகளும் உயர்ந்துள்ளது. டீலர்களுக்கான கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளதே இந்த சிறு விலை உயர்வுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமிஷன் தொகையை உயர்த்தக் கோரி பெட்ரோல் பங்க் டீலர்கள், வரும் 24-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இப்போது கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதை அடுத்து அப்போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in