

நடப்பு ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை 15% உயர்ந்து 1,050 டன்னாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் தேவை 910 டன் என்ற அளவில் இருந்தது. நடப்பு ஆண்டின் முதல் பாதியில் தங்கத்தின் தேவை 2,335 டன் என்ற அளவில் இருக்கிறது.
மேற்கத்திய நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை மாற்றி அமைப்பதற்காக தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். ஆனால் அதே சமயத்தில் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் தங்கத்தின் தேவை குறைந்திருக்கிறது. இந்த தகவலை சர்வதேச தங்க கவுன்சில் வெளியிட்டிருக்கிறது.